தட்கல் இருக்கட்டுமே.. ரயிலில் இனி ஈஸியா சீட் கிடைக்கும்.. அன்ரிசவ்டு பெட்டி அதிகமாக வரப்போகுது.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு என்றுமே முன்னுரிமையை ரயில்வே நிர்வாகம் தந்து வருகிறது.. அந்தவகையில், பயணிகளுக்கு மேலும் அதிக வசதிகளை வழங்க ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

ரயில்களில் தேவைக்கேற்ப பயணிக்க கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே, நாடு முழுவதுமுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் புதியதாக இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

train

பொது பெட்டிகள்: இது குறித்த ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப் குமார் சொல்லும்போது, "கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 583 புதிய பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அவை 229 ரயில்களில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தில் மேலும் 1000 பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் கூடுதலாக இணைக்க திட்டமிட்டிருக்கிறோம்.. புதிய பெட்டிகள் இணைப்பு மூலம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடுதலாக பயணிக்கலாம்.

அடுத்த 2 வருடங்களில், 10,000க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படும். அதில் 6000 பொது பெட்டிகள், 4000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகும். இந்த வசதிகள் வந்தபின்னர் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார்.

முன்பதிவு இல்லாத பெட்டிகள்: இப்படிப்பட்ட சூழலில், தெற்கு ரயில்வே ஒரு செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளது.. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் 27 விரைவு ரயில்களில் இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

"அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10,000 முன்பதிவில்லாத பெட்டிகள் புதிதாக இணைக்கப்படும் என, ரயில்வே தெரிவித்தது. அதில், 6,000 பொதுப் பெட்டிகளும், 4,000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் அடங்கும். இதன் வாயிலாக கூடுதலாக, 8 லட்சம் பேர் பயன் அடைவார்கள்..

இணைப்பு ரயில்கள்: கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை, 583 புதிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, 229 ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளன. இம்மாதத்துக்குள், 1,000க்கும் மேற்பட்ட பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, 647 ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவு ரயில்களில், அதிகம் பேர் பயணிக்க வசதியாக, எல்எச்பி வகை பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரயிலிலும், தலா 4 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் திட்டமிட்டுள்ள 51 ஜோடி விரைவு ரயில்களில், இதுவரை 24 ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகளாக தரம் உயர்த்தப்பட்டு இயக்கப்படுகின்றன.

உயரும் தரம்: சென்னை சென்ட்ரல் - புதுடில்லி, சென்ட்ரல் - போடிநாயக்கனுார், எழும்பூர் - தூத்துக்குடி உள்ளிட்ட ரயில்களும் இதில் அடங்கும். இதனால், 7,900 இருக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதத்துக்குள், 27க்கும் மேற்பட்ட ஜோடி ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால், பொது வகுப்பு பெட்டி பயணியருக்கு, 5,600 இருக்கைகள் கூடுதலாக கிடைக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+