குப்பைகளுடன் மோடி, யோகி படங்கள்.. கொந்தளித்த சமூக வலைதளம் - தூய்மை பணியாளருக்கு மீண்டும் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குப்பை வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களை எடுத்து சென்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் குப்பை வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் புகைப்படங்களை குப்பைகளுடன் வைத்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 16 ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குப்பை வண்டியில் மோடி, யோகி படங்கள்

குப்பை வண்டியில் மோடி, யோகி படங்கள்

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த துப்புரவு தொழிலாளியின் பெயர் பாபி என்றும், இவர் ஜெனரல்கஞ்ச் என்ற பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குப்பை வண்டியில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் படங்களை எடுத்து சென்றதற்காக அவர் மீது பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், தூய்மை பணியாளர் பாபி பொறுப்பாக பணி செய்யவில்லை என்று கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்த செய்தியும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஏழை கூலித் தொழிலாளியை இவ்வாறு பணியிடை நீக்கம் செய்தது அவரது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாபிக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்ததுடன் அவர் மீது நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தொழிலாளி விளக்கம்

தொழிலாளி விளக்கம்

இதுகுறித்து நகராட்சி ஆணையரை சந்தித்து விளக்கமளித்த பாபி, குப்பையில் யாரோ வீசிய படத்தை குப்பைகளுடன் வண்டியில் கொட்டியதாகவும், இதை கண்ட சிலர் தன்னை திட்டியதாகவும் ஒருவர் 2 படங்களை எடுத்துச்சென்றதாகவும், உடைந்த ஒரு படத்தை மட்டும் விட்டுச்சென்றதாகவும் கூறினார். குப்பைகளை அகற்றுவதே தன்னுடைய பணி என்றும், இதன் தீவிரம் புரியாமல் குப்பையில் கிடந்த படங்களை எடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

மீண்டும் வேலை

மீண்டும் வேலை

இந்த நிலையில் பாபிக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மதுரா விருந்தாவன் நகராட்சி ஆணையர் அருணயா ஜா தெரிவிக்கையில், "பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று மீண்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது. இனி அவர் மிகவும் கவனமாக தன்னுடைய பணியை செய்ய வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+