அண்ணா பல்கலைக்கழக அதிர்ச்சியே இன்னும் போகவில்லை.. சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை: சென்னை ஐஐடியில் முதுகலை படிக்கும் மாணவி கேண்டீனில் டீ குடிக்க சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்த, கேண்டீன் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கேண்டீனில் பணியாற்றிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலும் விளக்கம் கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. பெண்களை பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐஐடி கேண்டீனில் தேநீர் குடிக்க சென்ற முதுகலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி மாணவி ஒருவர், கேண்டீனில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதன்பின் ஐஐடி மாணவி நேரடியாக புகார் அளித்துள்ளார். இதன்பின் கேண்டீனில் பணியாற்றிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடி கேண்டீனிலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications