"கூகுள் பே - போன் பே - பேடிஎம்" முடங்கியது.. கையில் பணத்துடன் வெளியே செல்லுங்கள்.. என்ன காரணம்?
சென்னை: இந்தியா முழுவதும் போன்பே, ஜி பே உள்ளிட்ட பல்வேறு யபிஐ செயலிகளின் செயல்பாடு என்பது தடைப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் பணி நடந்து வருவதால் கடைகளுக்கு செல்வோர் கையில் பணத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாம் அனைவரும் கடை, ஹோட்டல்களுக்கு செல்லும்போது யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்து விடுகிறோம். இதனால் கையில் பணம் எடுத்து செல்வது குறைந்து விட்டது. அதோடு எளிமையாக கடைகளில் இருக்கும் ஸ்கேனரை ஸ்கேன் செய்து வாங்கிய பொருட்களுக்கான பணத்தை நாம் வழங்கி வருகிறோம்.

இந்த யுபிஐ பணப்பரிவர்த்தனையில் பல செயலிகள் உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்பட இன்னும் சில முக்கிய செயலிகள் நம் பணப்பரிவர்த்தனைக்கு உதவியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று யுபிஐ செயலிகள் வழியாக பணப்பரிமாற்றத்துக்கான சேவை என்பது திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினருக்கு வழக்கம்போல் சேவையில் குறைபாடு இல்லை. ஆனால் இன்னொரு தரப்பினருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 11.26 மணிக்கு பல வாடிக்கையாளர்கள் பிரச்சனையை எதிர்கொண்டனர். இந்த பிரச்சனை என்பது 11.40 மணிக்கு அதிகரிக்க தொடங்கியது. யுபிஐ செயலிகளில் இருந்து வாடிக்கையாளர்களால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்ய தொடங்கினர்.
தற்போது வரை இந்த சேவை என்பது சரியாகவில்லை. யுபிஐ செயலிகளின் பணப்பரிவர்த்தனை தொடர்பான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் என்பிசிஐ எனும் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI or National Payments Corporation of India) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த கார்ப்பரேஷன் தான் நம் நாட்டில் யுபிஐ பணப்பரிவர்த்தனை தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
இதுதொடர்பாக என்பிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛என்பிசிஐ தொழில்நுட்ப கோளாறு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. இதனால் முன்னணி யுபிஐ பணப்பரிமாற்றங்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பிரச்சனை சரியானதும் அப்டேட் செய்கிறோம். இந்த சிரமத்துக்கு மன்னிப்பு கேட்கிறோம்'' என்று கூறியுள்ளது. இதனால் கடை, ஹோட்டல்களுக்கு செல்லும் மக்கள் கைகளில் பணத்தை எடுத்து கொண்டு செல்வது நல்லது. யுபிஐ செயலியை நம்பினால் சிக்கலில் சிக்கலாம்.
மேலும் யுபிஐ சேவையில் கடந்த 20 நாளில் இப்படியான பிரச்சனை வருவது என்பது 3வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 2ம் தேதி மற்றும் மார்ச் 26 ஆகிய தேதிகளில் பலரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். அதன்பிறகு பிரச்சனை என்பது சரிசெய்யப்பட்டது. அதன்படி இன்றும் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது. இதனால் கையில் பணத்துடன் செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications