ஏப்ரல் 1 முதல் உங்க யுபிஐ செயல்படாமல் போகலாம்.. வங்கி கணக்கில் மொபைல் எண்ணை உடனே செக் பண்ணுங்க
சென்னை: கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மொபைல் எண்ணை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன. இந்த நிலையில், யுபிஐ விதிகளில் சில முக்கிய மாற்றங்களை NPCI கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறையால் சிலருக்கு யுபிஐ சேவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எந்த மாதிரி எண்களை வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
யுபிஐ சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது யுபிஐ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாற்றம்
பயனர்களின் பாதுகாப்பு கருதி யுபிஐ விதிகளில் அவ்வப்போது சில அப்டேட்களையும் விதிகளில் மாற்றங்களையும் என்பிசிஐ எனப்படும் தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், யுபிஐ- மொபைல் எண் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி குறிபிட்ட சில மொபைல் எண்களுக்கு யுபிஐ செயல்படாமல் போகலாம். இது குறித்த விவரங்கள் வருமாறு:-
செயல்படாமல் உள்ள செல்போன் எண்களுடன் யுபிஐ இணைக்கப்பட்டு இருப்பது மோசடிகளுக்கு வழி வகுப்பதாக உள்ளது. பயனர்கள் தங்கள் செல்போன் எண்ணை மாற்றினாலோ அல்லது டி ஆக்டிவேட் செய்யும் போது கூட அவர்களின் யுபிஐ கணக்கு ஆக்டிவாக இருக்கும். இது மோசடிகளுக்கு வழி வகுப்பதாக உள்ளது. இந்த எண்கள் வேறு யாருக்கும் ஒதுக்கப்பட்டால் மோசடி நபர்கள் நிதி பரிவர்த்தனைகளை செய்யும் அபாயம் உள்ளது.
எனவே இவற்றை தடுக்க வங்கிகளும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் பொன்ற செயலிகள் செயல்படாமல் உள்ள செல்போன் எண்களை யுபிஐ கணக்கில் இருந்து நீக்க தொடங்கியுள்ளது. என்பிசிஐ விதிகளின்படி இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் எப்படி இதை அமல்படுத்தும்?
வங்கிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படாமல் உள்ள செல்போன் எண்கள், மறுஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட மொபைல் எண்ளை நீக்கம் செய்யும். அல்லது அலர்ட் செய்யும். பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு யுபிஐ கணக்கு முடக்கப்படும் முன்பாக தகவல் தெரிவிக்கப்படும்.
எச்சரிக்கைக்கு பிறகும் மொபைல் எண் செயல்படாமலே இருந்தால், யுபிஐ அக்கவுண்டில் இருந்து நீக்கப்படும். காலக்கெடு முடியும் முன்பாக தங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்தால் பயனர்கள் தங்கள் யுபிஐ கணக்கை மீட்டெடுக்க முடியும்.
யாருக்கு பாதிப்பு
* மொபைல் எண்ணை மாற்றிவிட்டு தங்கள் வங்கி கணக்கில் அப்டேட் செய்யாதவர்கள்
அழைப்புகள், மெசேஜ்கள், வங்கி அலர்ட்கள் ஆகிய எதுவுமே இல்லாத இன் ஆக்டிவ் நம்பருடன் நீண்ட காலத்தை யுபிஐ பயன்படுத்துவர்கள்.
* வங்கி கணக்கில் அப்டேட் செய்யாமல் தங்கள் மொபைல் எண்ணை சரண்டர் செய்தவர்கள்.
* பயனர்களின் யுபிஐ-யில் உள்ள எண் வேறு யாருக்கேனும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால், இது போன்ற எண்களுடன் யுபிஐ கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
யுபிஐ பாதிக்கப்படாமல் இருக்க..
* யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண் ஆக்டிவாக இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.
* வங்கிகளில் இருந்து ஓடிபி, எஸ்.எம்.எஸ் அலர்ட்ஸ்கள் வருகிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.
* யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணை நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் அலல்லது அருகில் உள்ள வங்கி கிளையில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
யுபிஐக்கு மொபைல் எண் ஏன் முக்கியம்?
OTP சரிபார்ப்புக்காக மொபைல் எண் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த மொபைல் எண் செயல்படாமல் இருந்தாலோ, வேறு யாருக்கோ ஒதுக்கப்பட்டாலோ, உங்கள் பரிவர்த்தனைகள் தோல்வி அடையும். அல்லது தவறான வங்கி கணக்கிற்கு பணம் போகும். நீண்ட காலமாக உங்கள் மொபைல் எண் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ, இன் ஆக்டிவாக இருந்தாலோ, உங்கள் வங்கி கணக்கில் உடனடியாக போய் அப்டேட் செய்து கொள்ளவும். இல்லை என்றால் வரும் 1 ஆம் தேதி முதல் யுபிஐயில் இருந்து நீக்கப்படும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications