UPSC Top 10: யுபிஎஸ்சி தேர்வில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற்ற 2 தமிழக மாணவர்கள்! யார் அவர்கள்?
சென்னை: மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்திய 2025 குடிமைப் பணிகள் தேர்வுக்கான, முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே எம், ஏ.ஆர். ராஜா மொய்தீன் ஆகிய இருவரும் அகில இந்திய அளவில் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவு), ஐஎஃப்எஸ் (வனம்) உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு நடத்தி ஆட்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் நியமித்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் முடிந்த நிலையில் அதற்கான நேர்முகத் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர், முதல் 10 இடங்களில் தேர்ச்சியாகியுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக தேர்வர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மொத்தம் 56 தமிழக மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்; கடந்த ஆண்டு 57 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அதிலும் தமிழகத்தில் 60 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் அதில் 56 பேர் "நான் முதல்வன் திட்டத்தில்" சேர்ந்து படித்தவர்கள்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத் துணை ஆட்சியரான ராஜேஸ்வரி சுவே, அகில இந்திய அளவில் "இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர், யு.பி.எஸ்.சி தேர்வில் மூன்று முறை முயற்சி செய்த பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
துணை ஆட்சியர் பணியில் கிடைத்த நடைமுறை அனுபவங்கள்தான், குடிமைப் பணிகளுக்கான தேர்வு மற்றும் நேர்காணலை வெறும் கோட்பாட்டுடன் அல்லாமல், செய்முறை நுண்ணறிவுகளுடன் அணுக உதவியதாக ராஜேஸ்வரி குறிப்பிட்டார்.
இவரின் தந்தை முருகதாஸ் மின்சாதன வணிகர். தாய் நாகராணி ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். "ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, அரசுத் திட்டங்கள் மக்களைச் சிறப்பாகச் சென்றடைய சேவை வழங்கும் அமைப்புகளை மேம்படுத்தவே நான் விரும்புகிறேன்," என்றார் ராஜேஸ்வரி.
கொரோனா பெருந்தொற்று காலகட்டமே தன்னை ஒரு குடிமைப் பணியாளராக வேண்டும் எனத் தூண்டியது என்றார் ஏ.ஆர். ராஜா மொய்தீன். எனினும், இம்முயற்சி எளிதாக இருக்கவில்லை; முதல்நிலைத் தேர்வுகளிலேயே மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது.
ராஜா டெல்லியில் இருந்து தேர்வுக்காகத் தயாரானாலும், தமிழகத்தைச் சேர்ந்த சக தேர்வர்களுடன் டெலிகிராம் குழு அமைத்து இணைந்து படித்தார். சென்னையைச் சேர்ந்தவரும், பெற்றோரின் ஒரே மகனுமான ராஜா, தமிழ்நாடு பிரிவில் இடம்பிடித்து, உலகளாவிய சுகாதார சேவையில் கவனம் செலுத்த ஆர்வமாக உள்ளார். இவர் மருத்துவர்! மற்றொரு தமிழக தேர்வரான ஸ்ருதி ஆர், அகில இந்திய அளவில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பயிற்சி மையங்கள் இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து அதிக தேர்வர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தன. கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ். பூமிநாதன் இதுகுறித்து கூறுகையில், "150-க்கும் மேற்பட்ட தமிழக தேர்வர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். சுமார் 80 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்தோம். எனினும், தரவரிசை அடிப்படையில் சிறந்த முடிவுகள் கிடைத்தன" என்றார்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் முதல்வர் டி. சங்கர சரவணன் கூறுகையில், "ராஜேஸ்வரி சுவே உட்பட 39 பேர் உறைவிடப் பரிட்சார்த்திகளாகவும், ராஜா மொய்தீன் உட்பட 17 பேர் உதவித்தொகை பெற்றவர்களாகவும் இருந்தனர்" என்றார்.
அருண்குமார் ஏ (585 வது இடம்) மற்றும் டாக்டர் நிஷாந்த் டி (821 வது இடம்) ஆகிய தேர்வர்கள் தமிழிலேயே தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றனர் என்பது பாராட்டத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications