நான் முதல்வன் திட்டம்: ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் UPSC முதன்மைத் தேர்வு ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்விற்கு கட்டணமில்லாமல் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்விற்கு தேர்வர்களை தயார்படுத்தும் வகையில், யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான மதிப்பீட்டிற்கு தேர்விற்கு விண்ணப்பம் தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜூலை 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிர்வு 2023 ஆஅம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், இந்தப் பிரிவு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
2023-24 பட்ஜெட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைத்து, மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளும் வழங்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 மற்றும் 2025 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வுகளில் முறையே 276 மற்றும் 315 நான் முதல்வன் ஊக்கத் தொகை பயனாளி மாணவர்கள் முதன்மைத் எழுதத் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்திட்டத்தின் படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு-2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை 26.07.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் UPSC முதன்மைத் தேர்வு ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தேர்வர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் அதிகபடியாக 37 வரையும், மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 35 வயது வரையும், பொதுப் பிரிவினர் 32 வயது வரையும் இருக்கலாம்.
மதிப்பீட்டிற்கு தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cms.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பம் கட்டணம் எதுவும் கிடையாது.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான ஹால் டிக்கெட் ஜூலை 3வது வாரம் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கொண்டு தேர்வு நடைபெறும். ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications