4 மணி நேரம் திகில்! திநகரில் அர்பன் கம்பெனி பியூட்டீசியனை அறையில் அடைத்து தாக்குதல்! கதறி அழும் பெண்
சென்னை: அழகு கலை சேவைக்கு சென்ற அர்பன் கம்பெனி நிறுவனத்தின் பெண்ணை திநகரில் ஒரு வீட்டில் 4 மணி நேரமாக அடைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்பன் கம்பெனி எனப்படும் ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் வீட்டை சுத்தப்படுத்துதல், டாய்லெட் கிளீனிங், கிச்சன் கிளீனிங், ஏசி, வாஷிங் மெஷின் ரிப்பேரிங் மற்றும் சர்வீஸ், அழகு கலைகள், மேக்கப், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறார்கள். ஆன்லைனில் புக் செய்தால் போதும் நம் வீட்டுக்கே வந்து இந்த பணிகளை முடித்து கொடுத்துவிடுவார்கள்.

இதனால் நிறைய பெண்கள் இந்த அர்பன் கம்பெனி சேவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் திநகரிலிருந்து அர்பன் கம்பெனிக்கு அழகு கலை சேவைக்காக புக் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கம்பெனி சார்பில் பெண் ஒருவர் சென்றார். அப்போது அவர் அந்த வீட்டு பெண்ணுக்கு தேவையான சேவைகளை செய்துவிட்டு காசு கேட்ட போது, தகராறு செய்து அந்த பெண்ணை 4 மணி நேரம் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், வேக்சிங், பெடிகியூர், ஐ ப்ரோ டிரிம்மிங் ஆகிய 3 சர்வீஸ்களுக்காக திநகரில் எனக்கு ஆர்டர் வந்தது. அதனால் நான் அங்கு போனேன். இதற்கு மொத்தம் 1175 ரூபாய் ஆனது. ஆன்லைனில் குறிப்பிட்ட தொகையும் என் கையில் குறிப்பிட்ட தொகையும் கொடுக்க வேண்டும். இவர்கள் மொத்த பணத்தையும் கையில் தருவதாகவே புக் செய்திருந்தார்கள்.
நான் 2 மணி நேரம் எல்லா சர்வீஸையும் முடித்துவிட்டேன். வேலைகளை செய்யும் போதே அந்த பெண் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார். நான் பதிலுக்கு எதையும் பேசவில்லை. பேசினால் ரேட்டிங்கில் கை வைத்துவிடுவார்கள். பிறகு எனக்கு பணியே கிடைக்காமல் போய்விடும். அதனால் நான் அமைதியாக இருந்தேன்.
எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு காசு கேட்ட போது நீ ஐ ப்ரோவை சரியாக டிரிம்மிங் செய்யவில்லை என பிரச்சினை செய்தார். நானும் சரி ஐ ப்ரோவுக்கு மட்டும் காசை கழித்துக் கொண்டு மீதம் செய்த சேவைகளுக்கு காசு கொடுங்கள் என கேட்டேன். தர முடியாது என சொன்னார். அத்துடன் என்னை அவதூறாக அசிங்கமாக பேசத் தொடங்கினார்.
உடனே அங்கு அந்த பெண்ணின் கணவர் வந்தார். அவர் வந்து கதவை மூடிவிட்டார். நானும் சார் உங்கள் மனைவியின் ஐ ப்ரோவை பாருங்கள். ஏதாவது தவறிருந்தால் என் மீது புகார் செய்யுங்கள் என சொன்னேன். இதற்கே நான் எதிர்த்து பேசுவதாக கூறி என்னை தள்ளிவிட்டனர். நான் கீழே விழுந்துவிட்டேன். 100 க்கு போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை.
பிறகு எங்கள் நிறுவனத்திற்கு கால் செய்தேன். எல்லார் எண்ணும் ஸ்விட்ச் ஆப். உடனே என் தோழிக்கு போன் செய்தேன். அவர் போலீஸுக்கு போன் செய்வதாக சொன்னார், அதன்பிறகுதான் கதவையே திறந்தார்கள். பிறகு போலீஸார் வந்து என்னை வெளியே அழைத்து வந்தார்கள். அவர்களிடம் ஆன்லைனில் பணம் தருவதாக கூறினர்.
போலீஸார் அவர்களை எந்த கேள்வியும் கேட்கவில்லை, என்னைத்தான் சமரசம் செய்தார்கள். இது போல் நிறைய பேர் வேலை செய்யும் வரை அமைதியாக இருப்பார்கள். பேமன்ட் என கேட்டால் இப்படித்தான் ரூடாக நடந்து கொள்வார்கள். எங்களுக்கு பாதுகாப்பே இல்லை. இதை கம்பெனியில் சொன்னாலும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை, என்னை போல் சிங்கிள் பேரன்ட் குழந்தைகளை வளர்க்க இப்படியெல்லாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது என அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications