என்ன கொடுத்தாலும் வாயை மூடிக்கிட்டு வாங்கிட்டு போகனுமா? எனக்கு பயம் இல்லை! வெளுத்து வாங்கிய ஊர்வசி!
சென்னை: சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் நடிகர் ஷாருக்கான். அதே நேரத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப் படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தேசிய விருதுகள் திறமைக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும், எதைக் கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டுமா? என கோபத்தோடு கேள்வி எழுப்பி இருக்கிறார் நடிகை ஊர்வசி.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு 71 வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக ஷாருக்கான் வென்று இருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை சிறந்த துணை நடிகருக்கான விருது எம்எஸ் பாஸ்கருக்கும், சிறந்த இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும், சிறந்த கதை வசனத்திற்கான விருது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் தேர்வு செய்யப்பட்டது. மேலும் உள்ளொழுக்கு படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நடிகர்கள் மீது கடும் விமர்சனமும் எழுந்து இருக்கிறது. திறமையான பல நடிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
குறிப்பாக பிரிதிவிராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் தி கோட் லைஃப் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருது அறிவிக்கப்படவில்லை. அந்த படத்துக்காக பல ஆண்டுகளாக உழைத்த பிரித்விராஜின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை அடுத்து திரைப்பட விருதுகளையும் மத்திய அரசையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய தேசிய விருது பெற்ற நடிகையான ஊர்வசி தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். " எப்படி ஆடுஜீவிதம் படத்தை புறக்கணிக்க முடிந்தது என தெரியவில்லை. நஜீபின் வாழ்க்கையையும் அவரது துயரங்களையும் வெளிப்படுத்த உடல் ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் பெரும் உழைப்பை கொட்டி இருந்தார் பிரித்விராஜ். ஆனால் அவருக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. எம்புரான் திரைப்படம் தான் இந்த புறக்கணிப்புக்கு காரணம் என அனைவருக்கும் தெரியும்.
விருதுகள் அரசியலாக மாறக்கூடாது. 2005இல் அச்சுவிண்டே அம்மா படத்துக்காக எனக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. அப்போது நான் எதிராக குரல் எழுப்பவில்லை. காரணம் பரிசானியா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சரிதாவுக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் போராடி வந்த சரிதாவுக்கு விருது கிடைத்ததால் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது எனக்காக மட்டும் அல்ல சக நடிகர்களுக்காகவும் பேச வேண்டும். தென் தமிழகத்தில் பல திறமையான நடிகர்கள் இருந்தும் அவர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால் அந்த அங்கீகாரங்கள் கிடைக்காமல் போய்விடும்.
தேசிய விருதுகள் திறமைக்கு மட்டுமே வழங்க வேண்டும். வேறு எதனின் அடிப்படையிலும் வழங்க கூடாது. எதைக் கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என அவர்களும் நினைக்க கூடாது. என்னை பொறுத்தவரை எந்த பயமும் இல்லை. இந்த கேள்வியை நான் எனக்காக அல்ல.. எனக்கு பின்னால் வருபவர்களுக்காக கேட்கிறேன்" என தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications