இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா.. B-1 விசாவால் வசமாக சிக்கியது எப்படி?
சென்னை: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு 34 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 238 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை செலுத்துவதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒப்பு கொண்டுள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், புனே, மும்பை, டெல்லி, கூர்கான், கொல்கத்தா, அஹமதாபாத், கோவை, கொச்சி, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. இதேபோல் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், போனிக்ஸ், ஹார்ட் போர்ட் உள்பட பல்வேறு நகரங்களிலும் கிளைகள் உள்ளன. ஒட்டுஎமொத்தமாக 22 நாடுகளில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.4 லட்சம் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்

பொதுவாகவே இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு திறமையான வெளிநாட்டு பயணிகளை அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் காரணமாக அனுப்பி வைப்பது வழக்கம் ஆகும். ஆனால் அப்படி திறமையான பணியாளர்களை அனுப்ப பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஊதியம் இருக்க வேண்டும். அமெரிக்காவில் கிடைக்காத வெகுதிறமையான பணியாளர்கள் என்ற அடிப்படையிலேயே அனுமதிக்கிறது. அதன் அடிப்படையில் தான் தற்போது ஹெச்1பி விசாவை அமெரிக்கா வழங்குகிறது.
இதன்படி எந்த கார்ப்பரேட் நிறுவனம் என்றாலும் இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா பெற வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவனம் B-1 என்ற பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தி தனது பணியாளர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ (ICE) முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.
அந்த அமைப்பு நடத்திய விசாரணையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதை கண்டுபிடித்தது. . இதன் மூலம், ஊதியம் மற்றும் தொழிலாளர் நல திட்டங்கள் ஆகியவற்றின் செலவுகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் தவிர்க்க முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினார்கள்.
பொதுவாக H-1B விசா பயன்படுத்தினால் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பலமடங்கு அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி குடிவரவு போன்றவற்றில் அமெரிக்க சட்ட விதிகளை முறைப்படி பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் B-1 பார்வையாளர் விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணியாற்ற வைத்த நிலையில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்க குடிவரவு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து முறையற்ற வகையில் செயல்பட்டு விசா மோசடி செய்தது மற்றும் குடியேற்ற செயல்முறைகளின் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் $34 மில்லியன் டாலர் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை செலுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த கடுமையான அபராதம் இதற்கு முன்பு இல்லாத ஒன்று என்று கூறப்படுகிறது. குடியேற்ற மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை என்றும் கூறப்படுகிறது. இது பன்னாட்டு நிறுவனங்கள் பொதுவாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் லாபம் ஒன்றே நடைமுறை என்று செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவாக ஐடி பணியாளர்கள் கூறுகிறார்கள்,
இதனிடையே எதிர்காலத்தில் குடிவரவுச் சட்டங்களை மீறுவதைத் தடுக்கவும், விசா நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணவும் கார்ப்பரேட் மட்டத்தில் கடுமையான இணக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அண்மையில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, வாரத்திற்கு ஆறு நாட்கள் அல்லது 70 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற வேண்டும் என கூறியிருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், லாப நோக்கத்திற்காக தங்கள் ஊழியர்களுக்கு ஹெச்1 விசாவிற்கு பதில் பார்வையாளர் விசாவான பி1 விசாவை வழங்கியது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications