வேலையை காட்டிய டிரம்ப்.. இன்று முதல் அமலுக்கு வரும் இந்தியாவிற்கு எதிரான வர்த்தக வரி! அமெரிக்க ஆணவம்
சென்னை: இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் பல பொருட்களுக்கு 25% வரை வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஏப்ரம் 2 அன்று ட்ரம்ப் அறிவித்த 26% வரியை விட 1% குறைவாகும்.

ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "இந்தியா நமது நண்பராக இருந்தாலும், அவர்களின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானவை. உலகிலேயே மிக உயர்ந்த வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் செயல்களைக் கண்டிக்கும் இந்த நேரத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ராணுவ தளவாடங்களை அதிகம் வாங்குவது நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி மற்றும் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும்," என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கு 10 நாள் காலக்கெடு வழங்கியதற்கு பிறகு வந்துள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எண்ணெய் விற்பனை அதன் பொருளாதாரத்திற்கு மறைமுக ஆதரவாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
ட்ரம்ப் வரி - இன்று முதல் அமலுக்கு வரும் வரி
இந்த வரிகள் ஆகஸ்ட் 1, 2025 முதல் எந்த தாமதமும் இன்றி அமலுக்கு வரும் என ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். "ஆகஸ்ட் 1 என்பது காலக்கெடு, அது உறுதியானது, தாமதிக்கப்படாது. இது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய நாள்!" என்று அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் பல பொருட்களுக்கு 25% வரை வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த வரிகள் குறித்து மத்திய அரசு தரப்பு வெளியிட்ட பதிலில், இந்தியா தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து எந்தவொரு வர்த்தக உடன்பாட்டையும் இறுதி செய்யும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. "விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கிலாந்துடனான சமீபத்திய விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக உடன்படிக்கை போலவே, பிற வர்த்தக உடன்படிக்கைகளில் உள்ளதைப் போலவே, நமது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்," என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, 25% இறக்குமதி வரிகள் குறித்த தாக்கத்தை இந்தியா மதிப்பிட்டு வருவதாகவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறியுள்ளது. வர்த்தக உடன்படிக்கை இறுதி செய்யப்படாததால், இன்று முதல் இந்தியா 20-25% வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார். ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்கா விதிக்கக்கூடும் வரிகள் தற்காலிகமானதாக இருக்கும் என்றும், அடுத்த சில மாதங்களுக்குள் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications