உச்சம் எடுத்த வர்த்தக போர்.. இந்தியாவை சீண்டி சின்னாபின்னமாகும் டிரம்ப்.. கதறும் அமெரிக்க மக்கள்
சென்னை: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பதிலடி வரிகள் காரணமாக சீனாவை விட அமெரிக்காதான் பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் இந்த 50% வரிவிதிப்பு, இன்று (ஆகஸ்ட் 27, 2025) இந்திய நேரப்படி காலை 9:31 மணிக்கு அமலுக்கு வந்துள்ளது.
இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா மீது டிரம்ப் வரி போட காரணம்.. இந்தியா மீது வரி போட்டால் இந்தியா நிறுவன பொருட்களை, இந்திய உற்பத்திகளை அமெரிக்கர்கள் வாங்குவதை குறைப்பார்கள் என்ற எண்ணம்.

இந்தியா மீது வரி விதிப்பு - டிரம்ப்
அதாவது இந்திய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்று மக்கள் வாங்க மாட்டார்கள் என்று டிரம்ப் நினைத்தார். இதையடுத்தே இந்தியா மீது டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நட்பு இருந்தாலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தக தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மேலும், இந்தியா தனது ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி வாடிக்கையாளர்களில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது. உக்ரைனில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விரும்புகின்றன. இது மேற்கூறிய காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதமாகும், என்று டிரம்ப் இந்தியாவை கடுமையாக எச்சரித்து உள்ளார்.
அழியும் அமெரிக்கா பொருளாதாரம்
ஆனால் இந்த வரி விதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள்தான். உதாரணமாக
1. இப்போது இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25% வரை வரிகளை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்க விற்பனையாளர் ஒருவர் கப் அண்ட் சாஸர் ஒன்றை இறக்குமதி செய்தால்.. அதற்கு 25% வரி விதிக்கப்படும். ஆனால் இதை யார் கொடுப்பார்?
2. இந்தியர்கள் இதை கொடுக்க மாட்டார்கள்.. இந்திய நிறுவனம் கொடுக்காது. இந்த வரியை இறக்குமதி செய்பவர்தான் கொடுப்பார். அதாவது யார் இறக்குமதி செய்கிறார்களோ.. அமெரிக்காவை சேர்ந்த அவர்கள்தான் கூடுதல் வரி போடுவார்கள்.
3. இதற்காக ஏற்படும் செலவை சமாளிக்க அவர்கள் விலையை ஏற்றுவார்கள். அதாவது இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த செலவை ஏற்கும்.
4. அந்த விலையை கொடுக்க போவது அமெரிக்கர்கள்தான். அமெரிக்க மக்கள்தான்.
5. சில விவசாய பொருட்களின் விலையை ஏற்ற முடியாத பட்சத்தில்.. அதை இறக்குமதி செய்யும் விவசாயிகள்தான் சமாளிக்க வேண்டும். அவர்கள்தான் இழப்பை சந்திப்பார்கள்.
6. டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. அங்கே பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. 2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன. இதில் நேரடியாக இந்தியா பாதிக்கப்பட்டாலும் மறைமுகமாக அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்











Click it and Unblock the Notifications