அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வந்ததும்.. நிலைமையே மாறப்போகுது! இப்பவே போய் தங்கம் வாங்கிடுங்க! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ₹7,080க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்.. அடுத்த சில நாட்களில் தங்கம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாக தொடங்கி உள்ளன. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆரம்பகட்டத்தில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் இன்னும் ஸ்விங் ஸ்டேட் மாகாணங்களில் முடிவுகள் வரவில்லை.

gold us presidential election 2024 kamala harris 2024

இதுவரை வெளியான முடிவுகளில் அமெரிக்க முன்னாள் அதிபர் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 120 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 177 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவார்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்.. அடுத்த சில நாட்களில் தங்கம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தங்கத்தின் விலை குறைந்தாலும்.. வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் .. அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ₹7,080க்கு விற்பனையாகிறது. மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹56,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ₹7,200க்கு விற்பனையாகிறது.

விலை உயர்வு: இப்போது தங்கம் விலை குறைந்துள்ளது.. ஆனால் கண்டிப்பாக வரும் மாதங்களில் தங்கத்தின் விலை உயரும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் இப்போது ஃபெட் தலைவர் ஜெரோம் பவலின் கருத்துகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும், என்பது குறிப்பிடத்தக்கது. இதை டிரம்ப் ஊக்குவிக்கிறார். இதனால் தங்கம் விலை உயரும்.

இந்தியாவில் தங்கத்தின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பைப் பொறுத்தது. சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் விலை சரியும் போதெல்லாம் உயரும். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பு குறையும்.

சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.

2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+