உல்லாச செல்பியை வைத்து மிரட்டிய காதலன்- ஆள் வைத்து வெளுத்த அமெரிக்க காதலி - சென்னை சம்பவம்
சென்னையில் ஃபேஸ்புக் காதலனை அமெரிக்க காதலி ஆள் வைத்து கடத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காதலிக்கும் போது மயக்கத்தில் உல்லாசமாக இருந்த போது எடுத்த செல்ஃபி புகைப்படங்களை வைத்து மிரட்டிய காதலனை ஆள் வைத்து கடத்தி அடி வெளுத்து செல்போனை பறித்துக்கொண்டு முட்புதரில் வீசியுள்ளாள் அமெரிக்க காதலி. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
பேஸ்புக் நட்பு காதலாகி அந்த காதல் காமத்தில் முடிந்து பல பெண்களின் வாழ்க்கையை பதம் பார்த்துள்ளது. ஆனால் சென்னை வாலிபரின் வாழ்க்கையில் பேஸ்புக் நட்பும் காதலும் கடத்தல் அடிதடி என்று மிரட்டலாக நடந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த காதலனை அமெரிக்க காதலி ஆட்களை வைத்து வெளுத்து அடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டைச் சேர்ந்த தொழில் அதிபரின் அழகிய மகள் வாசவி. சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டார். சென்னையைச் சேர்ந்த நவீத் அகமது என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

வாலிபர் கடத்தல்
கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்த காசிம்முகமது என்பவரின் மகன்தான் நவீத் அகமது. பி காம் படித்து முடித்துள்ளார். கடந்த வாரம் சினிமா பார்த்து விட்டு இரவில் திரும்பிய போது மர்மநபர்கள் சிலர் நவீத்தை கடத்தி அடி வெளுத்து விட்டு செல்போன், வாட்சை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். காயங்களுடன் முட்புதரில் வீசப்பட்ட நவீத், டீக்கடைக்காரரிடம் செல்போனை வாங்கி பேசி அப்பாவிற்கு தகவல் தெரிவிக்கவே பெற்றோர்கள் வந்து நவீத்தை அழைத்து சென்றனர்.

செல்போனை பறித்த மர்மநபர்கள்
நவீத்தை கடத்தி செல்போனை பறித்து சென்றவர்கள் யாராக இருக்கும் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்தன. சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடத்தல் கும்பல் பயன்படுத்திய பைக்கின் பதிவு எண் சிக்கியது.

கடத்தலுக்கு காரணம்
அந்த பைக் வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. செல்வராஜின் மகன் சமுத்திரகனி வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்கிறார். இவர்களின் மகன் பாஸ்கர்தான் இந்த கடத்தலில் ஈடுபட்டவர் என்று தெரியவந்தது.
கடத்தலுக்குக் காரணம் குறித்து விசாரித்த போது நவீத் அகமதுவின் காதலி வாசவியின் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க காதலி
பேஸ்புக்கில் நட்பான காதலியுடன் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகிய நவீன், நெருக்கமாக நேரத்தில் எடுத்த செல்ஃபிக்களை வைத்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இந்த வாசவி, தனது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.

நெருக்கமான செல்ஃபி
அமெரிக்காவில் இருந்து கடந்த 6ஆம் தேதி சென்னை வந்த வாசவி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அண்ணாநகரில் உள்ள பூங்காவில் நவீனை சந்தித்து பேசிய வாசவி நெருக்கமான படங்களை அழித்து விடுமாறு நவீத்திடம் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க நவீத் மறுத்து விட்டார். இருவருக்கும் தகராறு ஏற்படவே ஹெல்மெட்டால் வாசவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காதலி கைது
இதனையடுத்தே வாசவியின் நண்பர்கள் நவீத்தை கடத்தி அடித்து உதைத்து செல்போனை பறித்துக்கொண்டதோடு ரத்த காயத்தோடு முட்புதறில் வீசிவிட்டு சென்று விட்டனர். தன்னை மிரட்டிய காதலனை ஆள் வைத்து அடித்த வாசவியை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆள் வைத்து அடித்த காதலி
கடத்தலுக்க உடந்தையாக இருந்த பாஸ்கர், சரவணனை கைது செய்து சிறையில் அடித்தனர். தலைமறைவாக உள்ள பாஷாவை தேடி வருகின்றனர்.
நெருக்கமான புகைப்படங்களை வைத்து மிரட்டினால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் தைரியமாக ஆள்வைத்து கடத்தி அடித்து வெளுக்கும் காதலிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications