நாதஸ் திருந்திட்டான்னு நினைச்சாங்களே! டிரம்ப் வைத்த ஆப்பு! தங்கம் விலை தாறுமாறாக உயரப்போகுது! போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக நாதஸ் திருந்திட்டான் என்று சொல்வது போல வர்த்தக போரை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வர்த்தக போரை தீவிரப்படுத்தி உள்ளார். மீண்டும் வர்த்தகப் போர் குறித்த கவலைகள் அதிகரித்ததையடுத்து, உலகதங்கம் விலை உயர தொடங்கி உள்ளது.

காலை 11:30 மணியளவில் MCX தங்கம்0.26 சதவீதம் உயர்ந்து ₹98,071 ஆக இருந்தது. இதற்கிடையில், MCX வெள்ளி ஒரு கிலோவுக்கு ₹1,14,875 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

gold rate silver investment

கடந்த சில நாட்களாக வர்த்தக போரை நடத்தாமல் இருந்த டிரம்ப்.. மீண்டும் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் வகையில், மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் (EU) இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த புதிய வரிகள் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதாவது மீண்டும் சர்வதேச சூழ்நிலை மோசமாகி.. மீண்டும் மக்கள் தங்கத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளன.

கடந்த சில நாட்களாக, ட்ரம்ப் குறைந்தது 22 நாடுகளுக்கு எதிராக வரிகளை அறிவித்துள்ளார், புதிய வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில், அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தக எதிர் நடவடிக்கைகளை ஆகஸ்ட் 1, 2025 வரை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவிடம் பிரேசில் அதிகபட்சமாக 50 சதவீத வரியை செலுத்தும், அதே நேரத்தில் ஈராக், அல்ஜீரியா மற்றும் இலங்கை 30 சதவீத வரியை செலுத்தும். புருனே, லிபியா மற்றும் மால்டோவா போன்ற பிற நாடுகள் 25 சதவீதமும், பிலிப்பைன்ஸ் 20 சதவீதமும் செலுத்தும். இதனால் வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது.

தங்கம் வாங்க சரியான நேரம் இதுவா?

இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,00,000 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தற்போது, தங்கத்தின் விலை ₹96,500 - ₹98,500 என்ற அளவில் உள்ளது.

ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, உள்ளூர் தங்கம் விலைகள் தொடர்ந்து அதிகரித்து, குறுகிய காலத்தில் 10 கிராமுக்கு ₹96,500 முதல் ₹98,500 வரை வர்த்தகமாகி, 2025 இரண்டாம் பாதியில் ₹98,500 முதல் ₹1,00,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலகளாவிய விலைகள் குறைந்தாலும், உள்நாட்டுத் தங்கம் விலைகள் ஜூன் மாதத்தில் 0.6% உயர்ந்தன. இதற்கு ரூபாய் மதிப்பு 0.2% பலவீனமடைந்தது காரணமாக. ஆனால் மே மாதத்தில் இறக்குமதி $2.5 பில்லியனாகக் குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் $3.1 பில்லியனாக இருந்தது. நகைக்கான தேவை பலவீனமாகவே உள்ளது, அதே நேரத்தில் முதலீடு தொடர்பான கொள்முதல் வலுவாக இருந்தது. அதாவது மக்கள் இதை அணிகலனாக வாங்குவது குறைவாக உள்ளது. ஆனால் முதலீடாக அதாவது பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, மே மாதத்தில் தங்க ETF-களில் நிகர உள்வரவு ₹2.92 பில்லியனாக இருந்தத. உலக அளவிலும், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் வலுவாக உள்ளது. SPDR தங்க ETF கையிருப்பு ஜூன் 1 ஆம் தேதி 930 டன்களில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி 948 டன்களாக உயர்ந்தது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+