கைமீறும் மோதல்.. ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு.. பிடன் விடாப்பிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை; ஏமனில் போராடி வரும் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏமன் விடுதலை தொடங்கி இஸ்ரேல் போருக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் பிடன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் செங்கக்கடலில் அமெரிக்கா - ஹவுதிகள் இடையே மோதல் நடக்கும் நிலையில் பிடன் முடிவு செய்துள்ளார்.

USA Biden Administration set to redesignate Houthi rebels as global terrorists

நேற்று இரவில் இருந்தே ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நாட்டின் ஒரு பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.

நேற்று ஹவுதி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க செங்கக்கடலில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நேற்று காலைதான் ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல் ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்க கப்பலை தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது

ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க கப்பலை நோக்கி வீசப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தோராயமாக 2-3 ஏவுகணைகள் கப்பலை தாக்கி சேதப்படுத்தி உள்ளன.. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா: இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி போராளி குழுக்கள் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஈரான், ஏமனில் இயங்கி வரும் இந்த ஹவுதி காஸாவில் இயங்கும் ஹமாஸ் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

தொடர் தாக்குதல்; கடந்த நாட்களாக ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது. இவை அமெரிக்காவின் இடைமறித்து ஏவுகணைகள் மூலம் மறித்து அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்காவின் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு உள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற கப்பலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் நவம்பர் முதல் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

இதற்கு எதிராக அமெரிக்கா - யு .கே சேர்ந்து கூட்டு தாக்குதல்களை கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில்தான் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

3ம் உலகப்போர்: இதெல்லாம் சேர்ந்து 3ம் உலகபோராக வெடிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது

சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக இந்த படைக்கு பண நீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன சொன்னார்?: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் தலையிட்டு வரும் நிலையில் ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம். இதை செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை.

இது மிகவும் வலிமையான மெசேஜ். இஸ்ரேல் நசுங்கிவிட்டது. இஸ்ரேல் பெரிய அடி வாங்கிவிட்டது. இஸ்ரேல் இனி முன்னேறவே முடியாது. இஸ்ரேல் எழுந்து வர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தி இருக்கிறோம், என்று ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+