சமையலறையில் இந்த 5 பொருளையும் தூக்கி போடுங்க.. கிச்சன் ஸ்டவ் கிட்ட இது இருக்கா? ஜாக்கிரதையா இருங்க
சென்னை: எப்போதுமே ஒரு இல்லத்தின் சுகாதாரம் என்பது அந்த வீட்டின் சமையல் அறையிலிருந்தே வெளிப்படுகிறது. வீட்டின் கிச்சனில் முழுகவனத்தை செலுத்தினாலே, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.. சமையலறை ஆரோக்கியமற்றதாக, அல்லது பாதுகாப்பு அற்றதாக இருந்தால், நோய்கள் நம்மை தாக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில், சமையலறையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் , தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஒருசிலவற்றை பார்ப்போம்.
ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சவுரப் செதி, கடந்தவாரம் ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிளாஸ்டிக் ஆபத்து
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பழைய பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.. அதில், பிளாஸ்டிக்கின் தன்மை சிதைந்துவிடும், அதீத வெப்பத்தினால் கரிம வேதிப்பொருளான (BPA) bisphenol A போல ரசாயனங்கள் வெளிப்பட்டு,உணவில் கலந்து, வீக்கம், நச்சுத்தன்மை மற்றும் ஹார்மோன் சீர்குலைவு போன்ற பிரச்சனை வரை ஏற்படுத்தலாம்.
அதேபோல, மைக்ரோ அவன் கரண்டி, பாத்திரங்களை பிளாஸ்டிக்கில் பயன்படுத்துவதால், நீரிழிவு, மலட்டுத்தன்மை, உடல் பருமன், ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆபத்து வரை அதிகரித்துவிடும். எனவே, பிளாஸ்டிக்கை தவிர்க்கலாம். காய்கறிகளை வெட்ட உதவும் பலகைகளை பிளாஸ்டிக்குக்கு பதிலாக, மரத்தினால் செய்யப்பட்ட அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட பலகைகளை பயன்படுத்தலாம்..
சீரற்ற நான்ஸ்டிக் பாத்திரம்
அதேபோல, சீரற்று, கீறல் விழுந்த நான்-ஸ்டிக் கடாய், நான்ஸ்டிக் பேன்களை பயன்படுத்த வேண்டாம்.. காரணம் இவைகளில் PFAS (perfluoroalkyl மற்றும் polyfluoroalky பொருட்கள் இருப்பதால், உணவில் கலந்து உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
அதேபோல, சமையலறையில் சில பொருட்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.. குறிப்பாக, அதேபோல, பாத்திரம் தேய்க்கும் சோப், வாஷிங் லிக்குவிட், போன்றவற்றையும் ஸ்டவ் பக்கத்தில் வைக்காமல் தொலைவில் வைக்கலாம்.. ஏனென்றால், இவைகளில் கெமிக்கல்கள் இருக்கும் என்பதால், உணவில் சிதறி விழ வாய்ப்புள்ளது.
துணிகள், பேப்பர்கள்
பேப்பர்கள், துணிகளை ஸ்டவ்வுக்கு பக்கத்தில் வைக்க வேண்டாம்.. பாத்திரம் பிடிக்க பயன்படுத்தும் துணி போன்றவற்றையும் ஸ்டவ்வுக்கு பக்கத்திலேயே தொங்க விடக்கூடாது.. எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளையுமே அடுப்பு அருகில் வைக்காமல் இருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கரண்டிகள், டப்பாக்களை வைத்தாலும்கூட, அவை அனலில் உருகிவிடும்.. இந்த பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்க நேரிடும்போது, உடல் உபாதைகளை தந்துவிட வாய்ப்புள்ளது. மரத்தாலான கரண்டிகள், கட்டிங் போர்டுகளும்கூட, அதிக வெப்பத்தால் விரிசலடையும்.. இதுபோன்ற விரிசல்களில் பாக்டீரியாக்கள் எளிதில் வளரும்.
பிளாஸ்டிக் சாப்பாடு
மிக்ஸி, பிரட் டோஸ்ட்டர், ஃபிளாஸ்க், அவன், செல்போன் போன்ற எலக்ட்ரிக் பொருட்களையும் ஸ்டவ் அருகில் வைக்காமல் தவிர்க்க வேண்டும். மேற்கண்ட பொருட்களில் பேட்டரிகள், ஒயர்கள் உள்ளதால், வெப்பம் காரணமாகவோ அல்லது சூடான உணவு சிதறி விழுவதாலோ, அவைகள் பழுதடைந்துவிடும்.
அதேபோல, சமைத்து முடித்ததுமே அவைகளை, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டிவிடுவார்கள்.. இப்படி செய்தால், பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்பினால் ஏ (BPA), தாலேட்ஸ் (Phthalates) போன்ற ரசாயனங்கள் உணவில் கலந்துவிட வாய்ப்புள்ளது.. எனவே சுடச்சுட உணவுகளை எப்போதுமே கண்ணாடி, ஸ்டீல் அல்லது பீங்கான் போன்ற பாத்திரங்களில் மாற்றி, உணவு ஆறியதுமே, பிளாஸ்டிக் பாத்திரங்களில் மாற்றி கொள்ளலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications