உத்தர பிரதேசத்தில்.. 11 முஸ்லீம் வேட்பாளர்களை எதிர்த்து.. சிங்கிளாக வென்ற பாஜகவின் இந்து வேட்பாளர்
சென்னை: உத்தரப்பிரதேசம் குந்தர்கி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி இந்து வேட்பாளர் ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 11 போட்டியாளர்களைத் தோற்கடித்து வென்றுள்ளார் . உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதியில் பாஜகவின் ராம்வீர் தாக்கூர் 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான குந்தர்கி பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்த இடமாகும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் நடந்த சட்டசபை தேர்தல்களுடன், பல மாநிலங்களிலும் இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டது. அதில் ஒன்பது உ.பி சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

பாஜக கடைசியாக 1993ல் நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் குந்தர்கி தொகுதியில் வெற்றி பெற்றது, அப்போது சந்திர விஜய் சிங் காவி பாஜக சார்பாக வெற்றியை பதிவு செய்தார்.
இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து.. இந்து வேட்பாளர் ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 11 போட்டியாளர்களைத் அங்கே தோற்கடித்து வென்றுள்ளார். குண்டர்கியில் பாஜகவின் ராம்வீர் தாக்கூர் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை இமாலய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றுள்ளார்.
பாஜகவின் ராம்வீர் தாக்கூர், சமாஜக் கட்சியின் முகமது ரிஸ்வான், ஆசாத் சமாஜ் கட்சியின் (கன்ஷிராம்) சந்த் பாபு, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனின் முகமது வாரிஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ரஃபத்துல்லா ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு வென்றுள்ளார்.
மேற்கு உ.பி.யின் சம்பல் லோக்சபா தொகுதியின் ஒரு பகுதியான குந்தர்கி அதிக முஸ்லீம்கள் கொண்ட தொகுதி ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. அங்கே இருக்கும் மக்கள் தொகையில் 60% பேர் இஸ்லாமியர்கள்.
குண்டர்கி இடைத்தேர்தலில், 11 முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எந்த கட்சியும் அங்கே இந்து வேட்பாளரை நிறுத்த முன்வரவில்லை. ஒரே ஒரு இந்து வேட்பாளரை பாஜக மட்டுமே நிறுத்தியது, அதே நேரத்தில் சமாஜ்பவாதி சார்பாக பல ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட முகமது ரிஸ்வான் இங்கே களமிறக்கப்பட்டார்.
ரிஸ்வான் முதன்முதலில் 2002 இல் குந்தர்கியில் வெற்றி பெற்றார், ஆனால் 2007 இல் BSP இன் அக்பர் ஹுசைனிடம் தோற்றார். அதன்பின் 2012 மற்றும் 2017 இல் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். சமாஜ்வாதியின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக இது இருந்தது. அப்படிப்பட்ட தொகுதியில் இந்த முறை பாஜக சார்பாக இந்து வேட்பாளர் ஒருவர் வென்றுள்ளது பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மீராபூர், குந்தர்கி, சிசாமாவ், கதேஹாரி, புல்பூர், மஜவான், காசியாபாத், கர்ஹால் மற்றும் கைர் ஆகிய இடங்களுக்கு நவம்பர் 20 அன்று தேர்தல் நடந்தது.
மீராபூர் தொகுதியில் மிதிலேஷ் பால் (ஆர்எல்டி) ஆர்எல்டி சார்பாக வெற்றி பெற்றார்
குந்தர்கி தொகுதியில் ராம்வீர் சிங் (பாஜக) எஸ்பி சார்பாக வெற்றி பெற்றார்
சிசாமாவ் தொகுதியில் நசீம் சோலங்கி (SP) சமாஜ்வாதி சார்பாக வெற்றி பெற்றார்
கடேஹரி தொகுதியில் தர்மராஜ் நிஷாத் (பாஜக) எஸ்பி சார்பாக வெற்றி பெற்றார்
புல்பூர் தொகுதியில் தீபக் படேல் (பாஜக) பா.ஜ.க சார்பாக வெற்றி பெற்றார்
மஜவான் தொகுதியில் சுசிஸ்மிதா மவுரியா (பாஜக) பா.ஜ.க சார்பாக வெற்றி பெற்றார்
காசியாபாத் தொகுதியில் சஞ்சீவ் சர்மா (பாஜக) பா.ஜ.க சார்பாக வெற்றி பெற்றார்
கர்ஹல் தொகுதியில் தேஜ் பிரதாப் சிங் (எஸ்பி) எஸ்பி சார்பாக வெற்றி பெற்றார்
கைர் தொகுதியில் சுரேந்தர் திலர் (பாஜக) பா.ஜ.க சார்பாக வெற்றி பெற்றார்












Click it and Unblock the Notifications