திடீர் திருப்பம்.. நொய்டாவில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த யோகி.. கொரோனா பரவலால் முடிவு!
சென்னை: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதேபோல, இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால், சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களை செய்துவருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்க பிரதமர் மோடியும் வந்து பிரசாரம் செய்துபோனார். பி.ஜே.பி, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது.

கொரோனா
ஓமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பரப்புரைகள் நடத்த அரசியல் கட்சிகள் யோசித்து வருகின்றன. மத்திய அரசும் அதிக அளவில் கூட்டம் கூடாமல் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கி இருக்கிறது. தேர்தல் பரப்புரைகளால் மக்கள் கூட்டம் கூடி, கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்திருக்கிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். நொய்டாவில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நாளை யோகி கலந்துகொண்டு பரப்புரை செய்ய இருந்தார். அந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நொய்டாவில் அதிகரிக்கும் கொரோனா
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கொரொனா பரவல் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அங்குதான் யோகி ஆதித்யநாத் செல்வதாக இருந்ததால், அவருக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பரப்புரைக் கூட்டம் திட்டத்தை யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.

ரத்து செய்த காங்கிரஸ்
பரேலி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மாரத்தான் நிகழ்ச்சியின் போது பெண்கள் பலரும் முகக்கவசம் அணியவில்லை. இதற்கு கண்டனங்கள் வந்தநிலையில், உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த 8 பொதுக்கூட்டங்களும் நடைபெறாது என தெரிவித்துள்ளது.

தேர்தல் நடக்குமா
உத்திரப்பிரதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சட்டசபைத் தேர்தல் குறித்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே கலக்கத்தில் இருக்கின்றன. இதனிடையே உ.பி. தேர்தல் குறித்து நாளை தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications