தோப்புக்குள்ளே காதலனுடன் இரவில் நுழைந்த பெண்.. திடீர்னு அங்கே தென்பட்ட உருவங்கள்.. இப்படியுமா?
சென்னை: தேசம் முழுவதும் பாலியல் அக்கிரமங்கள் அதிகரித்தபடியே உள்ளது. குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை பலாத்காரத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.. வடமாநிலங்களில் இந்த கொடுமை சற்று அதிகம் என்றே சொல்லலாம்.
நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் கொடுமை என்றால் நேற்று உத்திர பிரதேசத்தில் இன்னோர் கொடுமை. என்ன நடந்தது தெரியுமா?

மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு ஒடிஷாவின் ஜல்லேஸ்வரைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர், தன்னுடைய ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு,
ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மருத்துவ கல்லூரி மாணவி
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 3 பேர், அந்த மாணவியின், செல்போனை பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் போனை திரும்ப தருவதாக சொல்லி உள்ளனர்..
போலீஸ் தீவிரம்
இதனால் பதறிப்போன மாணவியின் நண்பர், பணத்தை எடுத்து வர ஓடினார்.. ஆனால் அதற்குள் அந்த பெண்ணை மருத்துவ கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர். தற்போது அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தப்பியோடிய 3 பேரையும் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள். உ. பியில் மற்றொரு பாலியல் கொடுமை நடந்துள்ளது
லக்னோவைச் சேர்ந்த அந்த மாணவி மதியம் சுமார் 12 மணியளவில் தனது உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக தனியாக வெளியே சென்றுள்ளார்.
தோப்பில் கொடுமை
பிறகு, இரவு நேரம் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பைக்கில் தன்னுடைய வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. பின்னர் வரும் வழியில் தோப்பு இருந்ததால் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த வழியாக வந்துள்ளனர். .. காதலர்கள் இருவரையும் பார்த்து விட்டு நெருங்கி வந்தது.
அந்த கும்பல்.. மாணவியின் நண்பரை கொடூரமாக தாக்கி, , அவரை அங்கிருந்து விரட்டி துரத்தியது.
பிறகு தனியாக நின்ற மாணவியை வலுக்கட்டாயமாக தோப்புக்குள் இழுத்துச் சென்று, 5 பேரும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு சென்று விட்டாகள்.
தனிப்படை அமைப்பு
குத்துயிரும் குலையுயிருமாய் விழுந்து கிடந்த மாணவி காதலனை தேடி நடந்ததை சொல்லி அழுதார்.. பிறகு, இது குறித்து உறவினர்களிடம் சொல்லவும், உடனே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையும் தற்போது
ஆரம்பமாகி உள்ளது
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பந்தாரா காவல் நிலைய அதிகாரி ராணா ராஜேஷ் குமார், "பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் அனைவரும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சிறப்புக் காவல் படையணிகள் அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்" என்று உறுதி தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications