ஆயுதபூஜை.. பயபக்தியுடன் காருக்கு பூஜை போட்ட சசிகலா.. "புத்தம் புது காரில்" சொய்ன்னு ரவுண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுதபூஜையையொட்டி சசிகலா தனது வீட்டில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு பூஜை போட்டார்.

ஆயுத பூஜை இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதிய தொழில்களை தொடங்குதல், ஏற்கெனவே தொழில் செய்யும் இயந்திரங்களுக்கு பூஜை செய்தல், கணக்கு நோட்டுகள், வாகனங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்களுக்கும் மஞ்சள் குங்குமமிட்டு பூஜை செய்வது வழக்கம்.

V.K.Sasikala celebrates Ayudha Pooja in her house

வாகனங்களுக்கு வாழைத்தார் கட்டி மாவிலை கொத்து வைத்து சுண்டல் , பொரி வைத்து இந்த பூஜை செய்யப்படும். அது போல் நாளை விஜயதசமி நன்னாளில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விஜயம் கிடைக்கும். அந்த வகையில் அன்றைய தினம் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆயுத பூஜையையொட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது வீட்டில் பூஜை செய்து வழிபட்டார். பொரி, கடலை, சுண்டல் வைத்து வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி கும்பிட்டார். இதையடுத்து வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் அவர் பூஜை செய்தார்.

பின்னர் தனது அண்ணி இளவரசி, கார் டிரைவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். வழக்கம் போல் வாகனத்தில் பூஜை போட்டதும் ஒரு ரவுண்ட் போவோம் இல்லையா, அது போல் சசிகலாவும் ஒரு ரவுண்ட் காரில் சென்றுவிட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்த சசிகலாவுக்கு அவரை போலவே தெய்வ பக்தி அதிகம்.

இருவரும் சேர்ந்து பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிப்பட்டுள்ளனர். அது போல் விநாயகர் சதுர்த்தி அன்றும் சசிகலா தனது வீட்டில் சுண்டல், கொழுக்கட்டை செய்து படைத்து பூஜை செய்வது வழக்கம். அது போல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வெள்ளி விநாயகர் கோயிலுக்கும் தினந்தோறும் பூஜை செய்யும் குருக்களுக்கு மாத ஊதியத்தையும் பூஜைக்கான பொருட்களையும் சசிகலா வாங்கித் தருகிறார்.

சசிகலா நேற்றைய தினம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் நிறைவேறிட அனைவராலும் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிருள்ள பொருட்கள், உயிரற்ற பொருட்கள் என அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறை பொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை திருநாளாகும். அதேபோன்று, மகிஷாசுரன் என்னும் கொடிய அரக்கனை அன்னை பராசக்தி அழித்து வெற்றி வாகை சூடிய நாளினை விஜயதசமி திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. மேலும், விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு, நற்காரியங்களைத் தொடங்கிடும் வெற்றித் திருநாளாகவும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

V.K.Sasikala celebrates Ayudha Pooja in her house

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்: லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+