சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் நியமனம்
கடந்த 1995-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த லட்சுமி நாராயணன், கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் ஆஜரானதுடன், சட்டம் பற்றி 350 கட்டுரைகளையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி. லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட லட்சுமி நாராயணனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.
ஏற்புரையாற்றிய நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சட்டம் படிக்கத் துவங்கிய போது தமது தந்தை இறந்து விட்டதால், தாய் தான் தன்னை ஆளாக்கியதாகவும், சகோதரரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதாக குறிப்பிட்டார். நீதிபதியாக பொறுப்பேற்றது சாதனையல்ல எனவும், அதையும் தாண்டி நாம் செய்வதுதான் சாதனை எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நீதிபதி வி.லட்சுமி நாராயணனுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வழக்கறிஞர் வெங்கடாச்சாரி - சரோஜா தம்பதிக்கு மகனாக பிறந்த லட்சுமி நாராயணன், புரசைவாக்கம் எம்.சி டி.முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பையும், பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த அவர், கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் ஆஜரானதுடன், சட்டம் பற்றி 350 கட்டுரைகளையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications