சட்டசபையில் கேள்வி கணைகளால் துளைக்கும் செந்தில் பாலாஜி.. பதில் இன்றி தவிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
சென்னை: கடந்த 9 மாதங்களில் மின் பராமரிப்பு பணிகளை செய்தீர்களா என கேட்ட போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதற்கு பதில் இல்லை என மின்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் மின் தடை ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின.
இதற்கு செந்தில் பாலாஜி பதிலளிக்கையில் தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மேலும் அணில்கள் மின் வயர்களை உரசுவதால் மின் தடை ஏற்படுகிறது என விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சிகள்
அணிலால் மின் தடை என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் அணில்களால் மின் தடை ஏற்படுவது வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இன்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

கேள்வி
அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினார். அவர், கடைசி 9 மாதங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்தீர்களா? இல்லையா?'என கேள்வியைக் கேட்டார். இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பதில் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு கேள்விதான்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
@EPSTamilNadu இடம் 'கடைசி 9 மாதங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்தீர்களா? இல்லையா?' என ஒரேயொரு கேள்வியைக் கேட்டேன்.

லாயிட்ஸ் சாலை
பதில் இல்லை! சென்னை லாயிட்ஸ் சாலையில் கூட
@PThangamanioffl பராமரித்த நிலைமை இதுதான். பிறகு எப்படி பதில் இருக்கும்? என பதிவில் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிமுக அரசுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் நெருக்கடிகளை கொடுத்து வருவது சட்டசபை நிகழ்வுகள மூலம் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications