சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகர் விவேக் உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல- மருத்துவமனை விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விவேக் உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கமளித்தார்கள்.

Recommended Video

    சின்ன கலைவாணர் விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!

    நகைச்சுவை நடிகர் விவேக், தனது வீட்டில் அவரது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென இன்று அதிகாலை மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சுயநினைவின்றி வந்தார். அங்கு மருத்துவர்கள் அவரை தட்டி எழுப்பும் போது அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இதயம்

    இதயம்

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இதயம் செயல்படுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் விவேக்கிற்கு இதயச் செயல்பாட்டை தூண்டும் எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    பிரஸ்மீட்

    பிரஸ்மீட்

    இதுகுறித்து வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

    சிடி ஸ்கேன்

    சிடி ஸ்கேன்

    அப்போது மருத்துவர் கூறுகையில் விவேக்கிற்கு ஏற்பட்டது முழுக்கமுழுக்க மாரடைப்பு ஆகும். கோவிட் தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. விவேக்கிற்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை. அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    100 சதவீதம் அடைப்பு

    100 சதவீதம் அடைப்பு

    அதிலும் கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. இது விவேக்கிற்கு வந்தது முதல் மாரடைப்பு. மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்ததால் அவர் மயங்கியுள்ளார். 100 சதவீதம் அடைப்பு இருந்தால் இதயம் செயல்பாடே நின்று விடும். அதுதான் விவேக்கிற்கு நிகழ்ந்தது. விவேக்கிற்கு உயர்ரத்த அழுத்தம் உள்ளது என்றார் மருத்துவர்.

    English summary
    Vadapalani Hospital will release health bulletin on Vivek's and it may contain the treatment details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X