பாலியல் புகார்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பிக்பாஸ் விக்ரமன் மீது வடபழனி போலீஸ் வழக்கு
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் லண்டனில் ஆய்வுபட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம்.
அவர் என்னை காதலிப்பதாக சொல்லி சட்டரீதியாக திருமணமும் செய்துக் கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். என்னை காதலிப்பதாக சொல்லியே ரூ 13.7 லட்சம் பணம் வாங்கினார். அதில் ரூ 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி ரூ 1.7 லட்சம் திருப்பி தர வேண்டும்.
என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த புகாருக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில் கிருபாவும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகினோம். இதுதான் உண்மை. நான் அவரை காதலிப்பதாகவெல்லாம் சொல்லவில்லை. நெருக்கமான தொடர்பும் அவருடன் வைக்கவில்லை. நான் அவரிடம் 11 லட்சம் பணம் வாங்கியதாக கணக்கு காட்டினார்.
நான் ரூ 12 லட்சம் திருப்பி கொடுத்துவிட்டேன். அவருக்கு நான் எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. அவர் என் மீது கொடுத்த புகார் தவறானது. இதை நான் சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் போலீஸார் வழக்கு செய்யாததால் நீதிமன்றத்தை நாடினார் கிருபா. இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுபடி விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 13 வழக்குகளில் முக்கியமானது பெண் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மோசடி , நம்பிக்கை மோசடி, அவதூறாக பேசுதல், மிரட்டுவது, மிரட்டி தொந்தரவு தருவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளும் அடங்கும்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications