பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! தமிழக மின்சாரத்துறை மீது வைகோ அதிருப்தி!
சென்னை: தமிழக மின்சாரத்துறை பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொழில் துறை கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறியிருப்பதாவது;
''தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் சார்பில், மின் நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாளை டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருக்கிறது.''

''தமிழ்நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உயர்த்தப்பட்ட 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெறவேண்டும், பீக் ஹவர் கட்டணம் ரத்துசெய்தல், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தையும், பல்முனை ஆண்டு கட்டணத்தையும் உடனடியாக ரத்து செய்தல் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1 என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.''
''இதையடுத்து தமிழக அரசு சார்பில் மின்வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1 என்ற பழைய அட்டவணைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஒருயூனிட்டுக்கு ரூ.7.65 ஆக வசூலிக்கப்பட்ட மின்கட்டணம் ரூ.4.60 ஆக குறையும். என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.''

''சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு மற்ற கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று டிசம்பர்-10 ஆம் தேதி மதிமுக நிர்வாக குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.''
''பத்து லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டும், சுமார் ஒரு கோடித் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருதியும் தமிழ்நாடு அரசு, தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.''
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications