இந்த பக்கம் நேரு.. அந்த பக்கம் மகேஷ்.. தர்மசங்கடத்தில் ஸ்டாலின்.. லக்கி பிரைஸ் வைகோவுக்கு
மு.க.ஸ்டாலின் திருச்சி தொகுதியை வைகோவுக்கு ஒதுக்க காரணம் என்ன தெரியுமா?
Recommended Video

சென்னை: திருச்சி தொகுதியை வைகோவுக்கு தருவதில் திமுக மும்முரமாக இருக்கிறதாம். திமுகவை தவிர மற்ற கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.
சில தினங்களாகவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு என்னதான் காரணம் என்று விசாரித்தால் திமுக உட்கட்சி பூசலே என்பதும் அதை தவிர்க்கவும்தான் திமுக தலைமை புதிய முடிவை எடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திமுகவில் நீண்ட காலம் உறவில் இருந்துவருபவர் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஸ்டாலினுக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு திமுக மாநில அணி துணை செயலாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவின் மாநில இளைஞர் அணி துணை செயலாளராக இருப்பவர்.

திமுக பரம்பரை
அத்துடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரொம்ப நெருக்கம். மேலும் திமுக பரம்பரையை சேர்ந்தவர். ஆனால் நேருவுக்கும், மகேஷ் பொய்யாமொழிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். திருச்சி தொகுதியை இருவருமே கேட்டதாகவும் தர்மசங்கடத்தில் திமுக நெளிந்ததாகவும் சொல்லப்பட்டது.

கே.என். நேரு
இதில் ஒருவருக்கு தொகுதியை ஒதுக்கினால் இன்னொருவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என திமுக யோசிக்கிறது. மேலும் நேருவின் தம்பி ராமஜெயம் மறைவின் தாக்கம் இன்னமும் நிலவுவதாலும்தான் அதனையும் பரிசீலக்கிறது. எனவேதான் இதையெல்லாம் தவிர்க்கவும், கோஷ்டி பூசலை மேலும் வளர்க்காமல் தவிர்க்கவுமே கூட்டணியில் உள்ள வைகோவுக்கு திருச்சியை தர திமுக முடிவு செய்யப்பட்டதாம்.

கனிமொழி
அது மட்டுமில்லை, திருச்சி சிவா மீது தொகுதி மக்கள் நன்மதிப்பு வைத்திருந்தாலும், கட்சியில் அவ்வளவாக இப்போது செல்வாக்கு இல்லை என்றே கூறப்படுகிறது. டெல்லி பொறுப்பை கனிமொழி பார்த்து கொள்வார் என்று முடிவுள்ள நிலையில், நாளை திருச்சி சிவா கனிமொழியை மீறி, அல்லது எதிராகவோ செயல்பட்டு விடுவாரோ என்ற அச்சமும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

வைகோ
அதனால்தான் திருச்சி சிவாவுக்கும் தொகுதியை ஒதுக்காமல், சொந்த தொகுதியிலேயே தோற்றது தெரிந்தும் வைகோவுக்கு திருச்சியை தர முன்வந்துள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications