காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசிய பாஜக அமைச்சர்.. “பதவியை பறிங்க”.. வைகோ கொதிப்பு!
சென்னை : மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர் எனக் கூறிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் உள்ள சில நகரங்களில் சமீபத்தில் வன்முறைகள் நடைபெற்றன. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 'மஹாராஷ்டிராவில் திடீரென அவுரங்கசீப்பின் வாரிசுகள் பிறந்துள்ளனர்' எனத் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜகவினர் காந்தியை கொலை செய்த கோட்சேயின் வாரிசுகள்" என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங், "கோட்சே காந்தியைக் கொலை செய்திருந்தாலும் கூட அவர் இந்தியாவில் பிறந்தவர். பாபர், அவுரங்கசீப் போல் படையெடுத்து வந்த முகலாயர்கள் அல்ல. அதனால் அவுரங்கசீப், பாபரை, திப்பு சுல்தானைக் கொண்டாடுபவர்கள் இந்தியாவின் மகன்களாக இருக்க இயலாது" என்று கூறியுள்ளார்.
மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்தக் கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பா.ஜ.க அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெள்ளிக்கிழமை பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, "நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல.
ஆகையால் தங்களை பாபர், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது," என்று கூறி இருக்கிறார்.
பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது.
தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications