Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகோவுக்கு வந்த தர்மசங்கடம்? மதிமுக கேட்ட 6 சீட்டை திமுக தரலையா? விஸ்வரூபமெடுக்கும் சின்னம் மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவை தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளன.. அந்தவகையில் மதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.. இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் மதிமுக கூட்டணி விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளது.. இதில் மதிமுகவின் சின்னம் விவகாரமும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது..

ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை அதிரடியாகத் தொடங்கியுள்ளது.. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவினர், கூட்டணிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்..

Vaiko MDMK DMK Tamil Nadu Assembly Election 2026 TN election special

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், தற்போது அரசியல் வட்டாரத்தின் முழுக் கவனமும் மதிமுக மற்றும் வைகோவின் பக்கமே திரும்பியுள்ளது..

மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறதா அல்லது தனது தனித்துவத்தை நிலைநாட்டப் போராடுகிறதா என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக உருவெடுத்துள்ளது..

வைகோவின் மதிமுக தரப்பில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. குறிப்பாக துரை வைகோவின் அரசியல் வருகைக்குப் பிறகு, கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மதிமுக உள்ளது.. ஆனால், திமுக தரப்பிலிருந்து வரும் சிக்னல்கள் வைகோவை சற்று அப்செட் ஆக்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன..

மீண்டும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று திமுக அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கடந்த முறை போல 6 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

வைகோ அப்செட்?

ஒருவேளை தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக பிடிவாதம் பிடித்தால், தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.. இதுவே வைகோவின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது..

மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் கட்சியின் கௌரவம் எனப் பல முனைகளில் வைகோ சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழலில் இருப்பதால், இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. திமுக தனது பலத்தை நிரூபிக்க அதிகப்படியான தொகுதிகளில் தாமே நேரடியாக போட்டியிட விரும்புகிறது.. இது சிறிய கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்..

சொந்த சின்னம் அவசியம்

குறிப்பாக வைகோ போன்ற மூத்த தலைவர்கள் தங்களது கட்சியின் அடையாளத்தையும், கூட்டணியின் தேவையையும் சமநிலைப்படுத்துவதில் பெரும் சவாலைச் சந்திப்பார்கள்.. உதயசூரியன் சின்னமா அல்லது தனிச் சின்னமா என்கிற இழுபறியே மதிமுகவின் எதிர்காலத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக அமையும்..

மதிமுக இந்த முறை தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் மிக உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. துரை வைகோ அண்மையில் அளித்த பேட்டிகளில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தேவையான வாக்கு சதவீதத்தை பெற வேண்டும் என்றால், சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என்பதைச் சூசகமாக உணர்த்தியிருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது..

ஆனால், கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, திமுக தலைமை தனது கூட்டணி கட்சிகளை 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வைப்பதையே பாதுகாப்பானதாகக் கருதுகிறது..

தனிச்சின்னம் - உதயசூரியன்

சின்னத்தைத் தக்கவைக்க மதிமுக நினைப்பதற்கு பின்னால் ஒரு நீண்டகால அரசியல் இருப்பு சார்ந்த கவலை இருக்கிறது.. ஒரு கட்சி தொடர்ந்து மற்றவர் சின்னத்தில் போட்டியிடும்போது, அதன் தனித்துவமான வாக்கு வங்கி சிதையக்கூடும் என்றும், தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்படும் என்றும் மதிமுக தலைமை அஞ்சுகிறது..

தனி சின்னத்தில் நின்றால் மட்டுமே கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும் என்பது வைகோவின் எண்ணமாக இருக்கிறது.. ஆனால், திமுக தரப்பிலோ "தனிச் சின்னம் என்றால் குறைவான இடங்கள், உதயசூரியன் சின்னம் என்றால் கூடுதல் இடங்கள்" என்கிற ரீதியிலான கணக்குகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது.. இந்த விஷயம்தான் வைகோவை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன..

ஸ்ட்ரைக் ரேட்

எப்படி பார்த்தாலும் மதிமுக தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, அதேசமயம் திமுக தனது "ஸ்ட்ரைக் ரேட்" குறைந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது..

சின்னத்திற்காக இடங்களைக் குறைத்துக் கொள்வார்களா அல்லது இடங்களுக்காகச் சின்னத்தை விட்டுக் கொடுப்பார்களா என்பது நமக்கு தெரியவில்லை.. ஒருவேளை இந்த இழுபறி நீடித்தால், அது கூட்டணியின் சுமுகமான தொகுதிப் பங்கீட்டில் ஒரு முட்டுக்கட்டையாக மாறவும் அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வருகிறார்கள்..


இன்று நடந்த பேச்சுவார்த்தை

இந்நிலையில்தான், அறிவாலயத்தில் இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. மதிமுக குழுவில் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன், உயர்நிலை குழு உறுப்பினர் ஜீவன், மதிமுக தேர்தல் பணி செயலாளர் வி சேஷன் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்தையில் பங்கேற்றனர்.. தங்களது கோரிக்கையை எடுத்து வைத்த இந்த குழுவினர், செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்கள்.. அப்போது, மதிமுக அதன் சின்னத்தில் தனியாக நிற்கும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.. இந்த சின்னம் விவகாரம்தான் மீண்டும் பலரது கவனத்தை பெற்று வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+