மதம் என்பது வாழ்க்கை முறை! ஈகை வழிபாடு! இனிய ரமலான் வாழ்த்துகள்! வைரமுத்து
சென்னை: மதம் என்பது வாழ்க்கை முறை, ஈகை என்பது வழிபாடு என ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நேற்றைய தினம் பிறை தெரிந்ததால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார். அதன்படி காலை முதலே கூட்டு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்துடன் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தொழுகைகளில் ஈடுபடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அக்கம் பக்கத்தாருக்கு இனிப்பு, பலகாரங்களை கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரமலான் பண்டிகை குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உலக
இஸ்லாமியப் பேருலகத்துக்கு
இனிய ரமலான் வாழ்த்துகள்
இந்த இன்பத் திருநாளில்
இதயமே
ஈகைப் பொருளாகிறது;
அன்பே பரிமாறப்படுகிறது
இன்னோர் மனிதர்க்கு
இன்னா நேராதவரை
எந்த வாழ்க்கை முறையும்
இனியதுதான்
அது
மாண்புக்குரியது
மதிக்கப்பட வேண்டியது
மதம்
ஒரு வாழ்க்கை முறை;
ஈகை என்பது வழிபாடு
வாழ்க்கை முறையை
மதிக்கிறோம்;
வழிபாட்டை வாழ்த்துகிறோம்
உலகத்தில்
காற்றுவீசும் பரப்பெங்கும்
அமைதியும் அன்பும் நிலவட்டும்
ஈகைத் திருநாள் வாழ்க!
இவ்வாறு வைரமுத்து தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications