நான் போயிருக்கலாம்.. மகன் இருந்திருக்கலாம்.. வைரமுத்துவிடம் கதறிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: நான் போயிருக்கலாம் என் மகன் இருந்திருக்கலாம் என தனது மகனின் இறப்பால் கலங்கியபடியே கவிஞர் வைரமுத்துவிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் திருமகன். இவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். திருமகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக களமிறங்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

சட்டசபை நிகழ்வுகள்
தொகுதி பணிகளிலும் சட்டசபை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக முதல்வர் அறிவித்தபோது சட்டசபையில் தனது கன்னி பேச்சின் மூலம் நன்றி தெரிவித்தார் திருமகன். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

ஈரோட்டில் உள்ள மருத்துவமனை
இதையடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் மரணமடைந்தார். இதையடுத்து திருமகனின் உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வந்த திருமகனின் உடலை பார்த்து தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் கதறி அழுதார்.

அஞ்சலி
திருமகனின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் ஈரோட்டில் கடையடைப்பை நிகழ்த்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேஎஸ் அழகிரி, தங்கபாலு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

வைரமுத்து
இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து, திருமகன் ஈவெராவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது வைரமுத்துவை பார்த்ததும் இளங்கோவன் கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது. வைரமுத்துவை பார்த்ததும் கதறிய இளங்கோவன் நான் போயிருக்கலாம், என் திருமகன் இருந்திருக்கலாம் என்றாராம்.

வைரமுத்து ட்வீட்
இதை வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில் பெரியார் பரம்பரைத்
திருமகன் இறந்தது பேரதிர்ச்சி
நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்
இல்லை; இருவருக்குமே
போகிற வயதில்லை
என்றேன் நான்
மரணம் கண்தெரியாத காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை
கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல்
இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications