அமைச்சர் உதயநிதிக்கு இருப்பது துணிவா? வாரிசா?.. கவிஞர் வைரமுத்துவின் கவிதை
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிவு மிக்க வாரிசு என கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழ்ந்தார்.
சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இனமானம் காத்த தமிழ்வானம் எனும் தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் அன்பழகன் குறித்து வைரமுத்து பேசும்போது உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கவிதைகளால் புகழ்ந்தார்.

வாரிசா துணிவா
வைரமுத்து தனது கவிதையில், அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, வாரிசா? துணிவா? என எல்லாருக்கும் கேள்வி இருக்கிறது. ஆனால் அவர் துணிவு மிக்க வாரிசு என வைரமுத்து பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உதயநிதிக்கு பதவிகளை கொடுத்தால் அது வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்தது போல் இருந்துவிடும் என கருதி முதல்வர் அமைதியாக இருந்துவிட்டார்.

அமைச்சர் பதவி
ஆனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவியாவது கொடுக்க வேண்டும் என அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அது போல் மாவட்ட திமுகவினரும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்குமாறு பரிந்துரை செய்தார்.

அமைச்சராக உதயநிதி பதவிப்பிரமாணம்
அதன்படி கடந்த 14 ஆம் தேதி உதயநிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை எழுப்பியது. பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வரத்தான் செய்யும். அவற்றை எனது செயல்பாடுகள் மூலம் பதிலடி தருவேன் என தெரிவித்திருந்தார்.

கூட்டணி கட்சியினர்
கூட்டணி கட்சிகளும் அமைச்சராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன. அது போல் உதயநிதி துணை முதல்வராக கூட தகுதி உடையவர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். அதுபோல் ஒருவரை அமைச்சரவையில் சேர்ப்பதும் நீக்குவதும் அரசியலமைப்பு சட்டம் அந்த மாநில முதல்வருக்கு வழங்கிய அதிகாரம் என்றும் இந்த அதிகாரத்தில் நாம் விமர்சனம் செய்யலாமே தவிர தலையிட முடியாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
திமுக கூட்டணி தற்போது இல்லை.. 3 மாதம் கூட தவெக ஆட்சி தாங்காது என்பதா? கொந்தளித்த சிபிஎம் சண்முகம் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச்












Click it and Unblock the Notifications