நாட்படு தேறல்...முதல் பாடலின் வரிகளை வெளியிட்ட வைரமுத்து
சென்னை : கவிஞர் வைரமுத்துவின் பிரம்மாண்ட முயற்சியாக, தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை அவர் உருவாக்கி வருகிறார்.
100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல் பாடல் ஏப்ரல் 18 ம் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

வாரம் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தலைப்பு பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்திருந்தார். கார்த்திகேயன் இயக்கிய இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தார்.
இந்நிலையில் இன்று, நாக்குச் செவந்தவரே என துவங்கும் முதல் பாடலின் வரிகளை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை கிருத்திகா உதயநிதி இயக்க, வாகு சமான் இசையமைத்து, பாடி உள்ளார்.
முதல் பாடல்#நாட்படு_தேறல் #பாடல்கள்_100#Naatpadu_Theral #Songs_100@kalaignartv_off #isaiaruvi pic.twitter.com/m2QWl7jTQc
— வைரமுத்து (@Vairamuthu) April 16, 2021
வைரமுத்து வெளியிட்ட வரிகள்...
நாக்கு செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே
மூக்கு னெடச்சவரே
முன்வழுக்கை மன்னவரே
கூத்து முடிஞ்சிருச்சு
கொமரிப்புள்ள எதுக்குன்னு
மாத்தும் பாக்காமப்
பரபரன்னு போறீரோ !
ஒருவாய் வெத்தலைய
இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும்
தின்னருசி மறந்திருமோ?
வைக்கப் போர்ப் படப்புக்கு
வடஇருட்டு மூலையில
அக்கப்போர் செஞ்சகதை
அய்யனுக்கு மறந்திருச்சோ ?
சவரக் கத்திக்குத்
தப்பிச்ச குறுமுடியில்
முகர ஒரசுனது
முழுசாத்தான் மறந்திருச்சோ ?
மொட்டு மொட்டு மல்லிகையை
முட்டிமுட்டித் தட்டிவிட்டு
முத்துமுத்து வேர்வைச் சொட்டு
மோந்தகதை மறந்திருச்சோ ?
வாழைத் தோப்புக்குள்ள
வளவி ஒடச்சகதை
வாழை மறந்திருக்கும்
வலதுகையி மறந்திருமோ ?
தேனேறிப் போயிருந்த
சிறுக்கிமக தலைமயிரு
பேனேறிப் போனதய்யா
பேச்சுவார்த்தை இல்லாம
புள்ளித் தேமலுக்கும்
புதுவேட்டி மடிப்புக்கும்
கருப்பட்டி ஒதட்டுக்கும்
கருத்தகிளி அலையுதய்யா
ஆறசரம் சங்கிலியோ
அட்டிகையோ கேக்கலையே
மஞ்சக் கயித்துக்கு
மனசுக்குள்ள அரிக்குதய்யா
ஆம்பளைக சகவாசம்
அடுத்தொருத்தி வாரவரைக்கும்
பொம்பளைக சகவாசம்
புதைகாடு போறவரைக்கும்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications