Thalaivar 173: சுந்தர்.சி விலகியதற்கு சந்தோஷப்படாதீங்க! "அண்ணாமலை" போல் சம்பவம் நடக்கும்! வைரமுத்து
சென்னை: தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியதற்கு யாரும் கள்ள சந்தோஷம் அடைய வேண்டாம் என்றும் "அண்ணாமலை" படத்தில் வசந்த் விலகியதும் அந்த படம் எப்படி வெற்றி பெற்றதோ அப்படி தலைவர் 173 படமும் வெல்லும் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சூப்பர் ஸ்டாரும்
உலக நாயகனும்
இந்தியக் கலையுலகின்
இருபெரும் ஆளுமைகள்
அவர்கள் இணைந்து
இயங்குவது என்பது
அட்லாண்டிக்கும் பசிபிக்கும்
ஆரத் தழுவிக்கொள்வது போன்றது
அவர்கள் தொட்டது
துலங்கவே செய்யும்
இயக்குநர் சுந்தர்.சி விலகியது
ஒரு விபத்தல்ல; திருப்பம்
அதில் யாரும்
கள்ளச் சந்தோஷம்
அடைய வேண்டாம்
வளைந்து செல்லும் நதி
ஒரு திருப்பத்திற்குப் பிறகு
வேகமெடுக்கும் என்பதே விதி
மாற்றம் ஒன்றே மாறாதது
'அண்ணாமலை' படத்தில்
வந்தேண்டா பால்காரன் பாடல்
எழுதுகிற வரைக்கும்
இயக்குநர் வசந்த் உடனிருந்தார்
ஏதோ ஒரு சூழலில்
அவர் விலக நேர்ந்தது
48 மணி நேரத்திற்குள்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
தன் இன்னொரு சீடனை
இயக்குநர் ஆக்கினார்;
சுரேஷ் கிருஷ்ணா
அது
ரஜினி வரலாற்றில்
தடம்பதித்த படமாயிற்று
இந்த மாற்றமும்
அப்படியொரு வெற்றியை எட்டலாம்
குழப்பம் கொடிகட்டும்
இந்தப் பொழுதில்
இருபெரும் கலைஞர்களுக்கும்
நாம் ஊக்கமும் உற்சாகமும்
ஊட்ட வேண்டும்
ஏனென்றால்
அரைநூற்றாண்டுக்கு மேல்
மக்களுக்கு மகிழ்ச்சிகொடுத்த
கலைஞர்கள் அவர்கள்
தொடருங்கள் தோழர்களே!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர் 2" எனும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிக்கும் தலைவர் 173 படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. கமல் தயாரிப்பில் ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
சுந்தர் சி இயக்கிய அருணாசலம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் சுந்தர் சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சுந்தர் சி நகைச்சுவை கலந்த படங்களையும் எடுப்பார். அரண்மனை போன்று ஹாரர் படங்களையும் எடுப்பார்.
2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுந்தர் சியின் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் "தவிர்க்க முடியாத காரணத்தால் கனத்த இதயத்துடன் 'ரஜினி173' படத்திலிருந்து விலகுகிறேன். கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது என்னுடைய சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு. இருப்பினும் அவர்களின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பெறுவேன்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அந்த அறிக்கை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. சுந்தர் சி.யின் திடீர் விலகலுக்கு என்ன காரணம் என சமூகவலைதளங்களில் விவாதம் நடந்தது. அப்போது ஆரம்பத்தில் படத்தின் ஒன்லைன் சொல்லி ரஜினியிடம் ஒப்புதல் வாங்கினாராம் சுந்தர் சி.
ஆனால் அது ஒரு ஹாரர் கதையாம். இதையடுத்து ஸ்கிரிப்டை எழுதி ரஜினியிடம் காட்டிய போது அந்த கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இதை சுந்தர் சி-யிடமே அவர் சொல்லிவிட்டாராம். மேலும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை எடுத்து தருவதாக சுந்தர் சி கூறியதாகவும் அதற்கு கமல் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சுந்தர்.சி. விலகியதாக சொல்லப்படுகிறது. எனினும் சுந்தர் சி.யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
நேற்று கமல் செய்தியாளர்களை சந்தித்த போது கூட, என் நாயகனுக்கு பிடிக்கும் வரை கதை கேட்போம் என்றார். "சுந்தர் சியே மீண்டும் வர வாய்ப்பிருக்கிறதா" என செய்தியாளர் கேட்டதற்கு இருக்கு என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications