கொரோனா போர் நிகழும் போது ஆயுதப்போர் தேவையா?.. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் குறித்து வைரமுத்து!
சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் போரை நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தம் வேண்டும்#Israel #Palestinian pic.twitter.com/BFQ2pUN7Py
— வைரமுத்து (@Vairamuthu) May 17, 2021
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில்
இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர்
சர்வதேச சமூகத்தின் கண்ணீராகிறது.
இரு நாடுகளின்
உரிமையும் காப்பும்
உறுதிப்பட -
போர் நிறுத்தம் வேண்டும்
உயிரை முன்வைத்துக்
கொரோனா போர் நிகழும் போது
நிலத்தை முன்வைத்து
ஆயுதப்போர் தேவையா?
இரு நாடுகள் மீதும் கவியட்டும்
சமாதான தேவதையின்
இரட்டைச் சிறகுகள்.
என போரை நிறுத்த கவிதை நடையில் கோரிக்கை விடுத்துள்ளார் வைரமுத்து.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications