வெற்றி உட்காரும் நெற்றி.. வள்ளுவர் மறை வைரமுத்து உரை.! முகப்போவியத்தை வெளியிட்ட வைரமுத்து!
சென்னை: கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். ஜூலை 13ஆம் தேதி இந்த நூல் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் இன்று அந்தப் புத்தகத்தின் முகப்போவியத்தை வெளியிட்டு இருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக கவிப்பேரரசாக கோலோச்சி வருபவர் வைரமுத்து. தேனியில் வடுகப்பட்டி கரிசல் காட்டில் பிறந்த கவிதை முத்து இந்த வைரமுத்து. இலக்கணங்களில் திளைத்து கிடந்த தமிழ் திரை உலகில் இலக்கியத்தோடு கலந்த எளிய நடை கவிகளால் பாட வைத்தவர்.
1980 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த அவர் கவிஞராக இன்றி, கவிப்பேரரசாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். பட்டி தொட்டி எங்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் இன்றளவும் ஒலித்து வருகிறது.
பழந்தமிழையும் செந்தமிழையும் கலந்து திரைப்பட பாடல்களாக மாற்றி சாதாரண ரசிகனையும் கவி பாட வைத்தவர். இதுவரை 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி ஏழு முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல விருதுகள் அவரது பேனாவின் பெருமையை பறைசாற்றின. கவிஞராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் பரிணமித்தவர் கவிப்பேரரசு. கள்ளிக்காட்டு இதிகாசிமும், கருவாச்சி காவியமும் அவரது வைர கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கங்கள். அதுமட்டுமல்லாமல் நாவல்கள், கவிதை, தொகுப்புகள் என 35க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார் வைரமுத்து. 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் திருக்குறளுக்கான விளக்க உரை ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் வள்ளுவர் மறை வைரமுத்து உரைக்கான முகப்போவியம் வெளியிடப்படும் என கூறி இருந்தார்.
உலகத் தமிழ் உறவுகளே!
— வைரமுத்து (@Vairamuthu) June 26, 2025
வணக்கம்.
வள்ளுவர் மறை
வைரமுத்து உரை
ஜூலை 13 வெளியாகிறது
இன்று
உலகத் தமிழர் கண்களுக்கு
முதன்முதலாக முகப்போவியத்தை
வெளியிடுகிறேன்
முதலில்
ஓவியம் படைக்கிறேன்
ஜூலை 13இல்
வள்ளுவர்
காவியம் படைக்கிறேன்
இதோ..
நீங்கள்
முத்தமிட்டு மகிழ
முகப்போவியம்… pic.twitter.com/g6ROeDrLgy
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வள்ளுவர் மறை வைரமுத்து உரைக்கான முகப்போவியத்தை வெளியிட்டுள்ளார் வைரமுத்து. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," உலகத் தமிழ் உறவுகளே! வணக்கம். வள்ளுவர் மறை வைரமுத்து உரை ஜூலை 13 வெளியாகிறது.
இன்று உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாக முகப்போவியத்தை வெளியிடுகிறேன். முதலில்
ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13இல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ.. நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம்" என பதிவிட்டுள்ளார். மேலும் முகப்போவியம் குறித்த விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications