“ஒன்றிரண்டு இடங்கள் கூடக்கொடுத்தும் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்” - கவிஞர் வைரமுத்து!
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் கூட்டணி குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கூட்டணி குறித்து பேசியதும், அதற்கு அவர் பாராட்டியதையும் வைரமுத்து நினைவு கூர்ந்திருக்கிறார். இத குறித்து அவர் தனது x பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது,

"சென்னை
ஏவி.எம்.ராஜேஸ்வரி
திருமண மண்டபம்
திருக்குறள் கலைஞர் உரை
வெளியீட்டு விழா
கலைஞரும் மூப்பனாரும்
கூட்டணிக்கு
நெருங்கி வந்துகொண்டிருந்த
நேரம்.
இருவரும் மேடையில்;
நானும் ஒரு பேச்சாளன்
என் பெயர் அறிவிக்கப்பட்டதும்
கலைஞர்
என் காதுக்குள் சொல்கிறார்:
"கூட்டணிக்குப் பொருத்தமாய்க்
குறள் இருக்கிறதா?
குறிப்பிடுங்களேன்"
பேசிக்கொண்டே
யோசித்துக் கண்டுபிடித்தேன்
'நல்ல குடியில் பிறந்து
பழிச்செயலுக்கு நாணுகிறவனோடு
ஒன்றிரண்டு இடங்கள்
கூடக்கொடுத்தும்
கூட்டணி வைத்துக்கொள்ள
வேண்டும்' என்ற பொருளில்
வள்ளுவர் வாக்கு ஒன்று
வழக்கில் இருக்கிறது என்றேன்
"குடிப்பிறந்து தன்கண்
பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு"
என்ற குறளுக்கிணங்க
கலைஞரும் மூப்பனாரும்
கூட்டணி கொண்டிருக்கிறார்கள்
என்று குறிப்பிட்டேன்
என்னைப் பார்த்துக் கலைஞர்
புன்னகை செய்தார்
அந்தப் புன்னகை
அது சிந்தப்பட்ட
சீதோஷ்ணத்திலேயே
இதயத்துக்குள்
இன்னும் இருக்கிறது இதமாக
குறள் மாறவில்லை;
கூட்டணியும் மாறக்கூடாது.
தொடரவேண்டும் என்பது
நடுநிலையாளர்களின் வேட்கை
மற்றும் நம்பிக்கை
தலைமை ஆசிரியரும்
வகுப்பாசிரியரும்
'கை'குலுக்கிக்கொண்டே
வகுப்புக்குள் நுழைந்தால்
பிள்ளைகளின்
பேச்சரவம் நின்றுவிடும்"
என கவிஞர் வைரமுத்து தனது x பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 'நல்ல குடியில் பிறந்து பழிச்செயலுக்கு நாணுகிறவனோடு ஒன்றிரண்டு இடங்கள் கூடக்கொடுத்தும்
கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications