செல்லாது.. செல்லாது! நீதிமன்றத்தை அவமதிச்சுட்டாங்க - எல்லாம் போலி! இபிஎஸ் மீது எகிறும் வைத்திலிங்கம்
சென்னை: அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு இன்று அதிகாலை வெளியான பரபரப்புடன் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் கூடியது.
இந்த நிலையில் மேடையிலேயே இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

தமிழ் மகன் உசேன்
அப்போது பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நிரந்தர அவைத் தலைவர்
இ.பி.எஸ் ஆதரவாளரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்ததற்கு ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம், புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க.வின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர். இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம்.

வைத்திலிங்கம் எதிர்ப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்துள்ளது. அதை மீறி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பு
23 தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு கூறிய நிலையில், அதையும் மீறி தீர்மானம் போடப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டதாக சொல்லப்பட்ட கடிதம் உண்மையானது அல்ல. போலியாக பலர் கையெழுத்து போட்டுள்ளனர். அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம் என கூறினார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications