40 நடிகைகளுக்கு 40 லட்சம்.. அதுவும் ஒரே ராத்திரியில்? இடியாப்ப சிக்கலில் இட்லி கடை! உடைந்த சீக்ரெட்!
சென்னை: அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கி இருக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவி வருகின்றன. உச்சபட்சமாக ரத்தீஷ் நடத்திய பிரம்மாண்ட பார்ட்டியில் பிரபல நடிகை உள்ளிட்ட 40 நடிகைகள் கலந்து கொண்டதாகவும், அவர்களுக்கு லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக வெளியான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அப்படி எல்லாம் நடக்கவில்லை எனவும், ஒரு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கிறார் என்பதற்காக நடிகைகள் குறித்து அவதூறு பரப்ப கூடாது என பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக கடந்த வாரம் சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரத்தீஷ், பராசக்தி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடைபெற்றது.
விசாகன் ஐஏஎஸ் வீட்டில் அவரிடமும் அவரது மனைவியிடமும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சென்னை எம்ஆர்சி நகரில் வசிக்கும் ரத்தீஷ் என்பவர் உடன் விசாகன் ஐஏஎஸ் தொடர்பில் இருந்ததாகவும், எந்த மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென ரத்தீஷ் விசாகனுக்கு அறிவுறுத்தியதாக சில வாட்ஸப் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியானது. மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருக்கிறார்.
மேலும் ரத்தீசும் தற்போது தலைமுறைவாகியுள்ளார். இந்த நிலையில் ரத்தீஷ் திமுக முக்கிய நிர்வாகிக்கு நெருக்கமானவர் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தீஷ் பெயரோடு, நடிகை ஒருவரின் பெயர் அடிபட்டுள்ள நிலையில், முக்கிய சிசிடிவி காட்சி ஒன்று அமலாக்கத்துறையிடம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் இந்த ஊழல் விவகாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படும் ரத்தீஷ், அமலாக்கத்துறை சோதனைக்கு முன் வெளிநாட்டிற்கு தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், சோதனைக்கு ஒரு நாளுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு தனியார் பார்ட்டியில் இவர் கலந்து கொண்டதாகவும், அதில் பல தமிழ் நடிகைகள், ரஷ்ய மாடல்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த பார்ட்டியில், 'சிறப்பான' விருந்து வழங்கப்பட்டதோடு, விலையுயர்ந்த பரிசுகள் பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விருந்தினருக்கும் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹேண்ட் பேக்குகள், கைக் கடிகாரங்கள், வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டிராகனான நடிகை ஒருவரும் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் பார்ட்டி குறித்த தகவல்களுக்கும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதற்கும் மறுப்பு தெரிவித்ததோடு கண்டனமும் தெரிவித்திருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளருமான வலைப்பேச்சு பிஸ்மி. இது தொடர்பாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர்," 40 நடிகைகளுக்கு ரத்தீஷ் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை கொடுத்ததாக வதந்திகள் உலாவி வருகிறது. உண்மையில் தமிழ்நாட்டில் 40 நடிகைகளே கிடையாது. அப்படி இவர்கள் தான் கலந்து கொண்டார்கள் என்றால் அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டியதுதானே. ஏதோ ஒரு சிசிடிவி காட்சிகளை வைத்து விட்டு இப்படி நடிகைகள் மீது அவதூறு பரப்ப கூடாது.
மேலும் ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கிறார் என்பதற்காக நடிகைகளை அவதூறாக பேசக்கூடாது. அதே நேரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களுக்கு அமலாக்கத்துறை மூலம் சிக்கல் வரவும் வாய்ப்பு இருக்கிறது" என கூறியுள்ளார். இதனால் சிம்பு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் நடிகை குறித்து பல்வேறு அவதூறு தகவல் பரப்பப்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக அவ்வாறு இல்லை என ஒரு பிரபலம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications