அதிரவைத்த வாசகம்.. பிரிவினை சக்திகளை திமுக பின்னணியில் இருந்து இயக்குகிறதோ? சந்தேகம் கிளப்பிய வானதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் சாலையோர தடுப்பில் எழுதப்பட்ட வாசகம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், சாலையோர தடுப்புகளில் இந்தியாவிற்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அந்த வாசகங்களை போலீசார் சுண்ணாம்பு பூசி அழித்துள்ளனர். இந்த வாசகங்களை எழுதியது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Neet tamil nadu Vanathi srinivasan

இதற்கிடையே இந்த வாசகங்கள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இச்செயலைக் கண்டித்து வருகின்றனர். பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், இந்த வாசகங்களை கண்டித்துள்ளதோடு, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' (நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்), 'இந்தியா ஒழிக' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவப் படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நீட் தேர்வு நடந்ததால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு புகார்கள் வந்துள்ளன.

நீட் எதிர்ப்பு பெயரில் தமிழகத்தில் பிரிவினைவாத பிரசாரம்! ஸ்டாலினுக்கு தெரியுமா? எல்.முருகன் கேள்வி


மத்திய பாஜக அரசின் உத்தரவுப்படி, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வை வெளிப்படைத் தன்மையுடன், நியாயமான முறையில் நடத்திட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயக வழியில் எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம். போராடலாம். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், 'நீட் எதிர்ப்பு' என்ற பெயரில், தேச பிரிவினையை தூண்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.

நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில், 'இந்தியா ஒழிக' என்பது மட்டும் கைகளால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' என்ற பிரிவினையை தூண்டும் வாசகங்கள் அதற்கான 'பிரின்டிங் பிளாக்' தயாரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து தேசப்பிரிவினை பிரச்சாரத்தை அமைப்பு ரீதியாக திட்டமிட்டு செயல்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.

தேசப் பிரிவினையை தூண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், திமுக, 'தனித் தமிழ்நாடு' என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி. நமது அரசியல் சட்டம் உருவான பிறகு, பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்தால், கட்சி நடத்த முடியாது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனாலும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒருபோதும் கைவிடவில்லை.

இப்போது பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை' கையில் எடுத்துள்ளது. தேசத்திற்கு எதிரான அதுவும் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க கூடாது. அவர்களை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் வாசகங்களை எழுதியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+