• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வானதியின் "தன லாபம்".. எஸ்.வி.சேகருக்கு செம தில்லு தான்.. சொந்த கட்சிக்காரரையே கலாய்த்து.. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: "தன லாபம்" என்று குறிப்பிட்டு எஸ்வி சேகர், ட்வீட் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது... இதையடுத்து வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து எஸ்வி சேகருக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.

  புதிய உற்சாகம்.. புதிய அலுவலகத்தை திறந்த Vanathi Srinivasan | Oneindia Tamil

  கோவை தெற்கு தொகுதியில், காங்கிரஸையும், மநீமய்யத்தையும் பின்னுக்கு தள்ளி 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்...

  இதையடுத்து, எம்எல்ஏவாக வானதி பதவியேற்று கொண்டார்.. அத்துடன் 3 நாளைக்கு முன்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்..

  கோவை தெற்கு எம்எல்ஏ அலுவலகம் 'தன லாபம்' என சுவரில் எழுதி திறப்பு! பூரிப்புடன் சீட்டில் அமர்ந்த வானதிகோவை தெற்கு எம்எல்ஏ அலுவலகம் 'தன லாபம்' என சுவரில் எழுதி திறப்பு! பூரிப்புடன் சீட்டில் அமர்ந்த வானதி

  வானதி

  வானதி

  இந்த ஆபீஸ், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே இருக்கிறது... இதன் திறப்பு விழாவில், வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.. அந்த ஆபீஸ் ரூம்சுவரில் 'தன லாபம்' என மஞ்சளில் எழுதி வைத்து பூஜையும் நடத்தப்பட்டது.. இந்த விழா குறித்த போட்டோக்களை வானதியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார்.

  ஆச்சரியம்

  ஆச்சரியம்

  வழக்கமாக, கடைகள், நிறுவனங்கள் திறந்தால்தான், இப்படி ‘தன லாபம்' என எழுதி திறப்பு விழா நடத்துவார்கள்... ஆனால் எம்எல்ஏ ஆபீசிலும் இப்படி எழுதப்பட்டிருந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. சிலர் அவரை கடுமையாக விமர்சித்து கமெண்ட்களையும் பதிவிட்டனர்... இந்த சூழலில்தான், தன லாபம் என்று போட்டு எஸ்வி சேகர் ட்வீட் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

   போட்டோக்கள்

  போட்டோக்கள்

  பேட்டி எடுப்பாவர் : உங்க தொழில்?
  பேட்டி கொடுப்பவர் : எம்.எல்.ஏ.
  பேட்டி எடுப்பாவர் : ஓ அதையே தொழிலாக்கிட்டீங்களா
  பேட்டி கொடுப்பவர் : அதான் எம் எல் ஏ ஆபீஸ்லயே லாக்கர் வைச்சு பூசை போட்டிருக்கேன்.
  பேட்டி எடுப்பாவர் : கேக்கும் போதே புல்லரிக்குது. உங்களை பேட்டியெடுத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
  பேட்டி கொடுப்பவர் : மீ டூ
  பேட்டி எடுப்பாவர் : ஐயையோ என்னை விட்டுடுங்க
  பேட்டி கொடுப்பவர் : அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் புரியாம ஓடுது என்று தெரிவித்துள்ளார்.

   கமெண்ட்கள்

  கமெண்ட்கள்

  எஸ்வி சேகரின் இந்த ட்விட்டை பார்த்த பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை ஆர்வத்துடன் பதிவிட்டுவருகின்றனர்.. அதில், ஒருவர், இதில் உங்களுடைய நோக்கம் என்னவென்று கேட்கிறார்.. அதற்கு எஸ்வி சேகர், "நகைச்சுவை" என்று பதிலளித்துள்ளார்.. மேலும் சிலரோ, "இதுக்கு நீங்க வானதி அக்காவிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம் சார், செம கலாய், செம கலாய்... உங்கள் கட்சிக்காரவுங்கள நீங்களே கலாய்த்தால் எப்படி சார்? " என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  பதவி

  பதவி

  எஸ்வி சேகரை பொறுத்தவரை, தமிழகத்தின் பாஜகவில் முக்கிய பொறுப்பு ஏதாவது கிடைக்கும் என்று காத்திருந்தவர்.. அவ்வளவு ஏன், 3 வருஷத்துக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜக மாநில தலைவர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்க தயாராக இருப்பதாக சொன்னவர்.. தமிழக பாஜக தலைமை என்னை, கட்சி அலுவலகத்தில் கூட விட மறுக்கிறது என்றும் சொன்னவர்.. தமிழகத்தில் சரிந்து கிடக்கும் வாக்கு வங்கியை தன்னால் நிச்சயம் உயர்த்தி காட்ட முடியும் என்று சொன்னவர்..

  நகைச்சுவை

  நகைச்சுவை

  இதற்கு பிறகும் ஏதாவது பதவி, பொறுப்பு என்று எதிர்பார்த்து கிடந்த நிலையில், டெல்லி மேலிடம் இவரை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.. எனவே இப்படி சொந்த கட்சியை சேர்ந்தவர்களை கலாய்ப்பதும், விமர்சிப்பதும் எஸ்வி சேகருக்கு புதிது கிடையாது என்றாலும், இதை நகைச்சுவை என்று அவரே சொல்லிவிட்டதால், இந்த ட்வீட்டை நாம் ஈஸியாக எடுத்து கொண்டு கடந்து விட வேண்டியதுதான்..!

  English summary
  Vanathi Srinivasan: Actor Sve Shekhers funny tweet
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X