சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினின் ஆவேச சட்டசபை பேச்சு.. வானதி சீனிவாசனுக்கு வந்த குபீர் சந்தேகம்!

Google Oneindia Tamil News

சென்னை: அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு அதில் ஒரு சந்தேகம் வந்துள்ளது.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 24-06-2021

    சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகையில், திமுகவை யானை என்று வர்ணித்தார்.

    ஏன் இந்த பேச்சு வந்தது என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை. யானையும் இல்லை" என்று ஆளுநர் உரையை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

    தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு.. 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து?.. முக்கிய தளர்வுகள் என்ன? தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு.. 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து?.. முக்கிய தளர்வுகள் என்ன?

     ஸ்டாலின் பேச்சு

    ஸ்டாலின் பேச்சு

    இந்த நிலையில்தான், ஸ்டாலின் பேசுகையில், யானை என்று சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். ஆனால், அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை.

     யானையின் பலம்

    யானையின் பலம்

    நான்கு கால்கள்தான் யானையினுடைய பலம். அதேபோல சமூக நீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை ஆகிய நான்கும்தான் திமுக பலம். இந்த அரசும் அந்த பலத்தில்தான் நிற்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியிருந்தார்.

    வானதி சீனிவாசன் ட்வீட்

    இந்த நிலையில்தான், வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இதை கிண்டல் செய்யும் வகையில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அடக்கப்பட்ட யானை என்னவெல்லாம் செய்யும்? காட்டில் சுற்றும் யானை என்ன செய்யும்? "கும்கி யானை " என்ன செய்யும்? ????...!!! இவ்வாறு வானதி ட்வீட் செய்துள்ளார்.

     கும்கி யானை என்று கிண்டல்

    கும்கி யானை என்று கிண்டல்

    கும்கி யானை என்ற வார்த்தையை மட்டும் கோட் செய்துள்ளார். இதன் மூலம், அவர் திமுகவை பழக்கப்பட்ட கும்கி யானை என்று கிண்டல் செய்கிறாரா எனக் கேட்கிறார்கள் நெட்டிசன்கள். அவரது பின்னூட்டத்தில் வானதி கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பதிவுகளை பார்க்க முடிகிறது.

    சட்டசபையில் கேளுங்க

    இந்த கேள்விய சட்டமன்றத்துல கேட்டிருக்கலாமே மேடம்? கேட்டிருந்தா அங்கேயே முதல்வர் பதில் கொடுத்திருப்பார். சட்டமன்றத்துல கேள்வி கேட்கதான் MLA-வ உங்கள அனுப்பியிருக்காங்க, டிவிட்டர்-ல கேட்க அல்ல. இவ்வாறு ஒரு நெட்டிசன் வானதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    யானைகள் என்ன செய்யும்

    அடக்கப்பட்ட யானை சர்க்கசில் கிரிகெட் விளையாடும். காட்டில் சுற்றும் யானை சாணம் போடும், பீபீபீபீபீ எனப் பிளிரும். கும்கி யானை மற்ற யானைகளை விரட்டும். நீர்யானை நீரில் வாழும். தேவயானை முருகன் கதையில் வரும், குழியானை மணலில் வாழும், என மக்கள் கூறுகின்றனர் மாண்புமிகு கமலா மேடம் அவர்களே. இப்படி ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    BJP MLA from Coimbatore south, Vanathi Srinivasan has a doubt on MK Stalin's elephant statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X