‘ஊட்டி டீ’ தூளுக்காக அசாமில் இருந்து இறக்குமதி.. ரேஷன் கடையில் விற்பனை படுத்திருச்சு.. வானதி சீற்றம்
சென்னை: ஊட்டி டீ தூளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ தூள் கொள்முதல் செய்யவதோடு, ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை, 'நீலகிரி நாக்குபெட்டா படுகர் நலச் சங்க' பிரதிநிதிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

பசுந் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், இது குறித்து 'இந்திய தேயிலை வாரியத்'திடம் விளக்கம் கேட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் இந்தப் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே, கடந்த 2001 அதிமுக ஆட்சியில், 'ஊட்டி டீ' என்ற பெயரில் ரேஷன் கடைகளில் டீ தூள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கான டீ தூள் 100 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால், தற்போதுள்ள திமுக அரசு ரேஷன் கடைகளில் விற்கப்படும் 'ஊட்டி டீ'க்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 முதல் 60 சதவீதம் மட்டுமே டீ தூளை கொள்முதல் செய்கிறது. 40 முதல் 50 சதவீதம் டீ தூள் அசாம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன.
தொடக்கத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரை விற்கப்பட்ட ஊட்டி டீ, தற்போது 2 லட்சம் கிலோ மட்டுமே விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி, ரேஷன் கடைகளில், 'ஊட்டி டீ' தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 'ஊட்டி டீ'க்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும்.
அதற்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம் பசுந் தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார் வானதி சீனிவாசன்.
'ஊட்டி டீ'க்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும்
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 12, 2023
ரேஷன் கடைகளில் 'ஊட்டி டீ' தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும்
பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள்,… pic.twitter.com/WxcMlVZLPP
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications