சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை சுயநலம்".. அந்த பயம் இருக்கட்டும்.. மண் அள்ளி போடாதீங்க.. திமுகவை வேலூரில் டேமேஜ் செய்த வானதி

திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வானதி சீனிவாசன் பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்று அக்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக தெரிவித்து வருகிறார்கள்.. ஒருபக்கம் தங்களை குறை சொல்லி கொண்டே, பாஜக இவ்வாறு கூறி வருவது திமுக தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தி வருகிறது!

திமுகவுக்கு எதிராக காய் நகர்த்தி வருவதுடன், ஆளும் தரப்பை தினமும் விமர்சித்து கொண்டும், அறிக்கைகள் மூலமாக கண்டனம் தெரிவித்து கொண்டும் இருக்கிறது அதிமுக..

ஆனால் பாஜகவின் அதிரடிகள் முன்பு அவை மக்களிடம் எடுபடாமல் போய் கொண்டிருக்கிறது. ஒருகட்டத்தில் பாஜகவின் எல்லைமீறல், திமுகவுக்கு எரிச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக் இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக்

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

மேலும் பிரதான எதிர்கட்சி என்பதாலும், மத்தியில் ஆளும் தரப்பில் உள்ளதாலும், எந்தவிதமான கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில், கையை பிசைந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருவதாக, அக்கட்சி தலைவர்கள் விடாமல் சொல்லி வருகிறார்கள். கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், வேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் சொன்னதாவது:

 புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கை

"நமது நாடு கடந்த எட்டு வருடங்களாகவே பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது... அதனால் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் இன்று வளர்ந்துவிட்டது... புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது... மாணவர்களின் கல்விக்காக மத்திய அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.. குறிப்பாக ஆராய்ச்சி படிப்புகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அதன் மூலம் அதிகளவு மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

 சுயநலம்

சுயநலம்

திமுக சுயநல அரசியலுக்காக பிரதமர் மீதும் மத்திய அரசின் மீது தேவையில்லாத விமர்சனங்களை வைத்து தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள்... சுயநல அரசியலுக்காக நீட் எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, புதிய மொழி கற்க எதிர்ப்பு என்று ஏழை குழந்தைகளின் வாழ்க்கையில் திமுக மண்ணை அள்ளி போடுகிறது... அதிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 3-வது மொழியாக அவர்களின் விருப்ப மொழியை கற்கும் உரிமையை மாநில அரசு இனியாவது தரவேண்டும்.

 பதற்றத்தில் அமைச்சர்கள்

பதற்றத்தில் அமைச்சர்கள்

தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது.. அதனால்தான், இதை பார்த்து திமுக அமைச்சர்களுக்கு பதற்றம் வந்து விட்டது... மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் தமிழக பாஜக உறுதியாகவே உள்ளது.. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி 2 மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும்.. இதை நாங்களும் வலியுறுத்துவோம்.

 கண்டுபிடிங்க நீங்களே

கண்டுபிடிங்க நீங்களே

தமிழகத்தில் கந்துவட்டிக்காக ஏற்கனவே உள்ள சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த வேண்டும்... நூல் விலை உயர்வால் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொழில் அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து மத்திய அரசு உடனடியாக அமைப்புகளுடன் பேசியதை அடுத்து விலை குறைந்தது. ஆனால் பதுக்கல் உள்ளதாக மாநில அரசு கூறுகிறது. அதனை மாநில அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

English summary
vanathi srinivasan praises bjp and slams mk stalins dmk government in vellore meeting திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வானதி சீனிவாசன் பேட்டி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X