எங்க சீட் கொடுத்து இருக்கீங்க? கொதித்த வானதி! திராவிடத்திற்கு பாடம் எடுக்க வேண்டாம்! அப்பாவு பதிலடி
சென்னை: சட்டசபையில் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் இருப்பிடம் குறித்து இன்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கோபமாக கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். முக்கியமாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான கேள்விகளுக்கு இன்று அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார்.
அதோடு 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்பின் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் பெண் உரிமை, பாலின சமத்துவம் பற்றி பேசினார்.

வானதி ஸ்ரீனிவாசன்
பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது இருப்பிடம் குறித்து புகார் வைத்து அவையில் பேசினார். அதில், அந்த பக்கம் இருக்கும் ஆளும் கட்சி பெண் எம்எல்ஏக்களுக்கு ஒரே இடம் ஒதுக்கி இருக்கிறீர்கள். இன்னொரு பக்கம் அதிமுக பெண் எம்எல்ஏக்களுக்கு ஒரே இடம் ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள் எனக்கு எங்கே இடம் ஒதுக்கி உள்ளீர்கள் என்று, கோபமாக கேள்வி ( அவர் இரண்டு ஆண் எம்எல்ஏக்களுக்கு நடுவில் அமர வைக்கப்பட்டுள்ளார் ) எழுப்பினார். இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இதை என்னிடம் நீங்களே கேட்டு இருக்கலாமே?

சபாநாயகர் அப்பாவு
இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் என்னிடம் உள்ளது . என்னிடம் நேரடியாக சொல்லி இருந்தால் நானே இதில் இடம் மாற்றி கொடுத்து இருப்பேனே. அவையில் இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லையே. இந்த அவையில் யார் யார் எங்கே வைக்க வேண்டும் என்று என்னிடம் தனியாக சொல்லி இருந்தால், அதிகாரிகளை அழைத்து பேசி இருப்பேன். அதற்கு ஏற்றபடி கலந்து ஆலோசித்து ஒரு முடிவும் எடுத்து இருப்பேன். சப்ஜக்டுக்கு வாங்க என்றார்.

பாலின சமத்துவம்
அதற்கு வானதி சீனிவாசன், இதுதான் gender sensitivity.. பாலின ரீதியான புரிதல், உணர்வு இதுதான் என்று நான் சொல்கிறேன். பெண்களுடைய கஷ்டம் இது என்று நான் உங்களிடம் சொல்லும், பெண்களுக்கு இதுதான் கஷ்டம் என்பதை அறிந்து சட்டம் இயற்றுபவர்கள் செயல்பட வேண்டும். பெண்களை பற்றி முன்பே புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அந்த தன்மை இந்த பேரவையில் இருந்து செயல்பட வேண்டும். அந்த செயல்பாடு இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று வானதி கூறினார்.

பாலின சமத்துவம்
அதற்கு சபாநாயகர், பாலின சமத்துவம் பற்றி நீங்கள் திராவிட இயக்கத்திற்கு சொல்லித்தர வேண்டாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இதை பிரச்சனை செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இந்த அவையில் யார் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று விதி உள்ளது. முன்னாள் சட்டசபை தலைவர், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்களை எங்கே வைக்க வேண்டும் என்று பேசிதான் முடிவு எடுப்பார்கள்.

விதி உள்ளது
அதை நீங்கள் விவாத பொருளாக்க வேண்டாம், என்று கூறினார். இதையடுத்து எழுந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் உங்களுக்கு (வானதிக்கு) சாதகமாகவே பேசுகிறேன். பெண்களுக்குக்காக நீங்கள் பேசினீர்கள். பெண்களுக்கு முதலில் சொத்து உரிமை முதலில் கொண்டு வந்தது இந்தியாவிலேயே திமுகதான். தங்களுக்கு தெரியாது அல்ல,.. 100 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஓட்டுரிமை வழங்கினோம், என்று குறிப்பிட்டார்.

கீதா ஜீவன்
இதையடுத்து பேசிய சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை கீதா ஜீவன், உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று நினைக்கிறன். அவர் புதிதாக வரலாறு கற்றுள்ளார் என்று நினைக்கிறேன். பெண்கள் இப்போது சம வாய்ப்பு, சம உரிமை கேட்கிறார்கள், நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் அமர்ந்து வேலை பார்க்கலாம். அங்கே இருந்தும் வேலை செய்யலாம்.. இங்கு இருந்தும் வேலை செய்யலாம்.. என்று குறிப்பிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications