சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றப்படுவாரா.. வானதி சீனிவாசன் பரபரப்பு பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vanathi Srinivasan: தலைவர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றப்படுவாரா? - வானதி சீனிவாசன் பதில்- வீடியோ

    சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்த போதிலும் போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர்கள் ஒவ்வொருவராக தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தனர்.

    தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு தமிழிசை மீது அமித்ஷா கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் மற்றும் மூத்த தலைவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    3 எம்எல்ஏக்கள்... 50 கவுன்சிலர்கள்.. வளைத்து போட்ட பாஜக.. மமதாவுக்கு நெருக்கடி!3 எம்எல்ஏக்கள்... 50 கவுன்சிலர்கள்.. வளைத்து போட்ட பாஜக.. மமதாவுக்கு நெருக்கடி!

    வானதி சீனிவாசன்

    வானதி சீனிவாசன்

    இதனிடையே தமிழக பாஜக தலைவராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அமைப்பு ரீதியாக தேர்தல்

    அமைப்பு ரீதியாக தேர்தல்

    அப்போது தமிழிசை மாற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில் பாஜகவில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடக்கும் போது தலைவர்கள் மாற்றப்படலாம்.

    கட்சி தலைமை முடிவு

    கட்சி தலைமை முடிவு

    தேர்தலுக்காக தலைவர் பதவி மாற்றப்படவில்லை. ஒரு தலைவர் இரண்டு முறைக்கு மேல் இருக்க முடியாது. இது கட்சியின் அமைப்பு ரீதியான முடிவாகும். தேர்தலுக்காக தலைவர் மாற்றம் இருக்காது. யார் தலைவர் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார் வானதி.

    பாஜக தலைவர்

    பாஜக தலைவர்

    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கீழ் மட்டத்திலிருந்து தலைமை வரை தேர்தல் நடத்தும் கட்சி பாஜக ஆகும். அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார்.

    எப்போது மாற்றம்

    எப்போது மாற்றம்

    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்றால் தமிழிசையின் பதவிக்காலம் வரும் 2020-இல் முடிவடையும். எனவே அந்த ஆண்டிலோ அல்லது அதற்கு முன் தேர்தல் தோல்வியை காரணம் காட்டியோ தமிழிசை மாற்றப்படலாம் என தெரிகிறது.

    English summary
    Vanathi Srinivasan says that Tamilnadu BJP President Tamilisai will be changed or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X