பாஜகவுக்கு அக்கறை.. வானதி சீனிவாசன் சொன்ன நொடி.. அப்பாவு கமெண்ட்.. முதல்வர் முகத்தில் பூத்த புன்னகை
சென்னை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களின் மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ ஒன்றை மட்டும் அக்கறையுடன் ஆதரிப்பதாக கூறிய உடன் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் ஸ்டாலின் முகத்தில் புன்னகைப் பூ பூத்தது. அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் மூன்றாவது நாளான இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும் என்றும் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த தீர்மானங்களின் மீது நடைபெற்ற விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், இன்று சட்டசபையில் 2 தீர்மானங்கள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் குறித்து பறவை பார்வை பார்க்கும் போது தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கைகள் குறையும் போது நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் குரல் குறையுமோ என்ற அச்சம் நியாயமானது. பாஜகவை பொருத்தவரை அந்த தீர்மானத்தில் உள்ள கவலையை அக்கறையை புரிந்து கொள்கிறோம். எந்த இடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே அதனை புரிந்து கொண்டு தமிழக பாஜக நடவடிக்கை எடுக்கும் என்றார்.
அப்போது உடனே சபாநாயகர் அப்பாவு.. ஆதரவு.. என்று சொன்ன உடனே.. ஐயாவிற்கு அந்த வார்த்தை வேண்டும் என்று வானதி சீனிவாசன் கேட்டார். அப்போது சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களும் சிரித்தனர். முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு கொடுத்துள்ளது என்பதனால் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அது.
இதனைத் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் வானதி சீனிவாசன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை. சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். தனித்தீர்மானத்தில் உள்ள சாராம்சங்களை புரிந்து கொண்டிருப்பதாகவும், சீர்திருத்தமாக பார்க்க வேண்டும்/ ஒரு கட்சி ஆட்சி வந்துவிடுமோ எனக்கருதி தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்றும் வானதி சீனிவாசன் சட்டசபையில் பேசினார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications