Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூருக்குள் வந்த விருந்தாளி.. ஓட்டேரி ஏரியில் "குடை நீர்மத்தி".. மினி வேடந்தாங்கலால் சென்னை குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள ஓட்டேரிக்கு, பறவைகள் வர துவங்கியிருக்கின்றன.. "மினி வேடந்தாங்கல்" என்ற சிறப்பு பெற்ற ஓட்டேரி ஏரியில் பல்வேறு பணிகள் துரிதமாக ஆரம்பமாகியிருக்கின்றன. இது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஓட்டேரி ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தற்போது வரை இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன..

vandalur otteri mini vedanthangal

பறவைகள் குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், இந்த ஏரிக்கு வண்ண நாரை, நீர்க்காகம், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், சிறுகொக்கு, நத்தைகொத்தி, வக்கா, மாட்டுக்கொக்கு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வாடிக்கையாகும்.

குறிப்பிட்ட இந்த 3 மாதங்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏரியின் நடுவே உள்ள மரத்தில் பறவைகள் அதிக அளவில் அமர்ந்திருக்கும். இதையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ஏரி, "மினி வேடந்தாங்கல்" போலவே காட்சியளிக்கும்.. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அதிகளவில் இந்த ஏரிக்கு சென்று பறவைகளை பார்த்து ரசித்து செல்வார்கள்.. அதேபோல, பார்வையாளர்கள் ஏரியில் அமைக்கப்பட்டு உள்ள உயர் கோபுரத்தின் மீது ஏறி தொலைநோக்கி மூலம் பறவைகளை பார்த்து ரசிப்பார்கள்..

எனினும், பார்வையாளர்கள் பறவைகளை கண்டு ரசிப்பதற்கு வசதியாக, 2 வருடங்களுக்கு முன்பு, ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. அத்துடன், இருக்கையுடன் கூடிய நடைபாதை மற்றும் கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

குடைபோன்ற மரம்: பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பதற்கு ஏதுவாக, ஏரியினுள் நீர்மத்தி மரங்களும் நடப்பட்டன. இவை தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. குடை போன்று இருப்பதால், பறவைகள் முட்டையிடுவதற்கும், குஞ்சு பொறிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். தண்ணீரில் இருப்பதால், மற்ற விலங்குகளிடம் இருந்து பறவை குஞ்சுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

பொதுவாக ஏரிக்கு வரும் ஒரு பறவை, எந்த இடத்தில் மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை தேடும். பின், தன் இனத்தை அழைத்து வருமாம்.. ஆனால், இப்போது பறவைகள் சீசன் துவங்கியுள்ள நிலையில், பறவைகள் வரத்து குறைந்துவிட்டதாம். காரணம், அம்மரங்கள் தற்போது அதிகளவில் வேடந்தாங்கலில் வளர்ந்துவிட்டன.

பறவைகள்: ஏரியினுள் உள்ள நீர்மத்தி மரங்களில், 200க்கும் மேற்பட்ட பறவைகளே உள்ளன. அதேபோல பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.. ஏரிக்கு செல்லக்கூடிய பாதையும் அடைக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் மினி வேடந்தாங்கலை தேடி வரும் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிடுகிறார்களாம்.

அப்படியே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், "வாட்ச் டவரில்" நின்று பறவைகளை கண்டு ரசிக்க முடியாத அளவிற்கு மரக்கிளைகள் மூடி கிடப்பதாகவும், நடைபாதைகளிலும் குப்பை, கூளங்கள் நிரம்பியிருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, பறவைகளை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கக்கூடிய வகையில், இவைகளையெல்லாம் சீர்செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.

நம்பிக்கை: இதனிடையே பூங்கா தரப்பில் சொல்லும்போது, இப்போதைக்கு குறைந்த அளவிலேயே பறவைகள் வந்துள்ளன. அடுத்த மாதம்தான் பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.. அதற்குள் ஏரியினுள் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தற்போது கையிலெடுக்கப்பட்டுள்ளன.. அவைகளை விரைந்து முடித்து, பறவைகளை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+