வண்டலூரில் ஆச்சரியம்.. அதென்ன கருப்பா இருக்கு.. பார்க்குறதுக்கு உயர உயரமா இருக்கு? வாவ்.. சூப்பர்ல
சென்னை: வண்டலூர் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தந்து வரும்நிலையில், பூங்கா பற்றின செய்தி ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு, ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
வண்டலூர் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும்.. கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்.. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்திருந்தார்கள்.

பூங்கா: அதற்கு பிறகுதான், விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். எப்படியும் ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
சமீபத்தில்தான், இந்த பூங்காவை சுற்றிபார்க்க கட்டணம் உயர்த்தப்பட்டது.. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு காரணம், விலங்குகளின் சாப்பாட்டுக்கே ரூ.6 கோடிக்கு மேல் ஆகிறதாம்.. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது என்கிறார்கள்... மேலும், விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.. இதைத்தவிர, காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரைகள் போன்றவை அதிகமாக இடம் பெற உள்ளதாகவும் தெரிகிறது. அதனால்தான், இந்த கட்டண உயர்வு என்கிறார்கள்.
இந்நிலையில், இன்னொரு ஆச்சரிய தகவல் வெளியாகி உள்ளது.. இந்த பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் இருக்கிறதாம்.. இதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகளாகும்.. இதைத்தவிர, 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமலேயே உள்ளது. இந்தநிலையில் பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் மொத்தம் 33 முட்டையிட்டிருக்கிறதாம்... இவைகளை, குஞ்சு பொரிப்பதற்காக நெருப்புகோழிகள் அடைகாத்து வருகின்றன.
நெருப்புக்கோழிகள்: பொதுவாக நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். முட்டைகளை அதிகம் பொரித்தாலும், அவைகளில் குஞ்சு பொரிப்பது 6 அல்லது 8 முட்டைகள்தானாம்.. மற்ற முட்டைகள் வீணாகிவிடுமாம்.. அதனால்தான், நெருப்புகோழியின் முட்டை மற்றும் நெருப்புகோழிகளின் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, நெருப்புகோழிகளை பொறுத்தவரை பறக்க முடியாத பறவை.. ஆனால், சுதந்திரமாக நடமாடக்கூடிய பறவை.. வறண்ட தட்பவெட்ப நிலை மற்றும் காய்ந்த மணற்பரப்பை மட்டுமே ஏற்கும் சூழல் உடையது.. அதுவும் இனப்பெருக்கம் செய்யும்போது, இந்த கோழிகளை, கூடுதலான கவனம்செலுத்தி பராமரிக்க வேண்டியிருக்கிறது..
மழைக்காலம்: இந்த கோழிகள் இப்போது சென்னையில் உள்ளதால், அதற்கேற்ற தட்பவெப்ப நிலை கிடையாது.. மழைக்காலம் துவங்கி உள்ளது.. குளிரும் படர்ந்து வருகிறது. அதனால்தர்ன, முட்டைகள் பொரிக்க தாமதம் ஆகிறதாம், இருந்தாலும், அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருவதாக பூங்கா நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications