வண்டலூரில் விழுந்த சூப்பர் சர்ப்ரைஸ்! உயிரியல் பூங்காவில் வரப்போகும் வசதி! சுற்றுலா பயணிகளுக்கு ஜாலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பிரத்யேக உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.. மார்ச் 29 முதல் புத்தம்புது பொலிவுடன் மீண்டும் சஃபாரி சேவைகள் தொடங்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் கோடைக்காலப் பயணத்தைத் திட்டமிட ஒரு முக்கிய செய்தியை வண்டலூர் பூங்கா அறிவித்துள்ளது.. அது என்ன தெரியுமா?

சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது..

Vandalur Zoo

சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, இயற்கையான காப்புக்காடு சூழலில் 180-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும், 2,500-க்கும் அதிகமான விலங்குகளையும் பராமரித்து வருகிறது..

குறிப்பாக, இங்குள்ள சிங்கங்கள் உலாவும் லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இடங்களாகும்.. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சஃபாரி பகுதிகளில், பிரத்யேக வாகனங்கள் மூலம் விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலேயே நேரில் காணும் வசதி உள்ளது..

வண்டலூர் பூங்கா

இந்நிலையில், வண்டலூர் பூங்கா நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்களுக்கு லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு, மார்ச் 29-ஆம் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல சஃபாரி வாகனங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

கோடை விடுமுறை - சபாஷ் பணிகள்

இந்த தற்காலிக தடை என்பது சஃபாரி சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைய தேவையில்லை.. சஃபாரி பகுதிகளைத் தவிர்த்து, பூங்காவின் மற்ற அனைத்துப் பகுதிகளையும் பார்வையாளர்கள் வழக்கம் போல் சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. யானைகள், புலிகள், கரடிகள், அரிய வகை பாம்புகள், முதலைகள் மற்றும் வண்ணமயமான வெளிநாட்டுப் பறவைகள் உள்ளிட்ட பூங்காவின் பிற பகுதிகளைக் கண்டு ரசிக்க எந்தத் தடையும் இல்லை..

கோடை விடுமுறை காலம் விரைவில் தொடங்கவிருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே, கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்த இடைக்காலப் பராமரிப்புப் பணிகள் மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது..

நவீன வசதிகள் - டபுள் சர்ப்ரைஸ்

கடந்த 1985ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா, இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்..

குறிப்பாக சிறுவர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்கா, தற்போது நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.. சஃபாரி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த 11 நாட்களில் பூங்காவிற்குத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள், இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு பூங்கா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+